கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்த 2 பெண்கள் ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவருகிறது. தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ள போதும், உயிரிழப்புகள் ஏற்படாமல் இருந்தது மக்களிடையே ஆறுதலாக இருந்துவந்தது. இந்த நிலையில், கோவை வடவள்ளியை சேர்ந்த 56 வயது பெண் ஒருவருக்கு காய்ச்சல்Continue Reading

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக புதிய உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சியில் பங்கேற்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நிர்வாகிகள் மீது உறுப்பினர் சேர்க்கை படிவத்தை தூக்கியடித்து, கோபத்தில் அங்கிருந்து கிளம்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தலைமையில் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வின்போது, திமுகContinue Reading

தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பொதுமக்கள் பயணத்திற்கு என்று பேருந்து, ரயில் போன்ற பொது போக்குவரத்து சேவைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இந்த நிலையில், உலகத் தரத்தில் தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் சேவை விரைவில் கொண்டுவரப்படவுள்ளது. தமிழ்நாட்டிற்குள் இருக்கும் கிராம மற்றும் நகர்ப் பகுதிகளுக்குச் செல்லும் வகையில் இந்த ஹெலிகாப்டர் சேவை அமையவுள்ளது. இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் பேசியContinue Reading

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் விரைவில் அரசு நர்சிங் பயிற்சி மையங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும், அது குறித்து மத்திய அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். கோவையை அடுத்த நவக்கரை பகுதியில் ஏ.ஜே.கே.கல்லூரி குழும வளாகத்தில் புதிதாக துவங்கப்பட்ட ஏ.ஜே.கே.நர்சிங் கல்லூரி துவக்க விழா, கல்விக் குழுமங்களின் தலைவர் அஜீத்குமார் லால் மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அமைச்சர் மா.சுப்ரமணியன் கலந்து கொண்டு புதிதாகContinue Reading

வருமான வரிச் சட்டத்தில் ரெய்டு என்பது இல்லையென்றும், வரி ஏய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ள வருமான வரிச்சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித் துறை நடத்திய ரெய்டுகளின் விவரங்கள் அப்போது கைப்பற்றபட்ட ரொக்கம் போன்ற தகவல்களைக் கேட்டு விரிவான கேள்வியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் எழுப்பி இருந்தார்.Continue Reading

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்றுவந்த 55வயது பெண் உயிரிழந்த சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்துவருகிறது. இதையடுத்து, தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், சுகாதாரத்துறையின் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, அரசு மருத்துவமனைகள், திரையரங்குகள், வணிக வளாகம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும்Continue Reading

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 15-ம் தேதி ஈரோடு வரவுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெரியசேமூரில் நடைபெற்ற தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி பேசினார். அதில், எல்.பி.பி கால்வாய் நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, திட்டத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் விவசாயிகள் குழுக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இந்த திட்டத்திற்குContinue Reading

கோவை வ.உ.சி மைதானத்தில் வரும் 7ம் தேதி முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்றுப் புகைப்பட கண்காட்சி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். கோவை வ.உ.சி மைதானத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரலாற்று புகைப்பட கண்காட்சி அமைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றது. இந்தப் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்Continue Reading

நீலகிரியில் இன்று 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மலைகளின் ராணி என்றழைக்கப்படும நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோடை சீசனின்Continue Reading