உலகின் சக்திவாய்ந்த தலைவர்கள் தரைவரிசைப் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 78 சதவீத வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்காவின் வாஷிங்கடன் நகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டுவரும் ‘மார்னிங் கன்சல்ட்’ நிறுவனம், உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இந்தியா உட்பட உலகின் மிக முக்கியமான 22 நாடுகளின் தலைவர்கள் குறித்து அந்தந்த நாடுகளின் மக்களிடம் கடந்த ஜனவரி மாதம் 26-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இந்நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது.Continue Reading

பூடான் நாட்டின் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இரு தரப்பு உறவுகள் குறித்து பிரதமர் நரேந்திரமோடியுடன் இன்று பூடான் மன்னர் பேச்சு வார்த்தை நடத்துகிறார். நேற்று இந்தியா வந்த பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நாம்கெல் வாங்சுக்-விற்கு டெல்லி விமான நிலையத்தில் வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் சிறப்பான வரவேற்பு அளித்தார். இதைத் தொடர்ந்து, பூடான் மன்னருடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்Continue Reading

கடந்த 2019ஆம் ஆண்டு, தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, லலித் மோடி, நீரவ்மோடி ஆகியோரை மறைமுகமாக விமர்சித்து பேசிய ராகுல் காந்தி, “எப்படி, திருடர்கள் அனைவருக்கும் மோடி என பெயர் சூட்டுகிறார்கள்?” என கூறியிருந்தார். ராகுல்காந்தியின் இந்த பேச்சு, அவதூறு கிளப்பும் வகையில் இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. அதன் தீர்ப்பு சமீபத்தில் வழங்கப்பட்டது. அதில், அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது சூரத் நீதிமன்றம். இதன் காரணமாக, மக்களவைContinue Reading

பிரதமர் மோடியின் கல்வித்தகுதி தொடர்பான விவரங்களை கேட்டு தொடரப்பட்ட வழக்கில், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதத்தை குஜராத் நீதிமன்றம் விதித்துள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதமர் மோடியின் முதுகலை பட்டத்தின் விவரங்களை வழங்குமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மனு அளித்தார். இந்த மனு தொடர்பாக, சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு தலைமை தகவல் ஆணையம் எனப்படும் சிஐசி உத்தரவிட்டது. அதனை எதிர்த்து நீதிமன்றத்தில்Continue Reading