ராகுல்காந்தி மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

ஏப்ரல்.20 மோடி குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, ராகுல்காந்தி செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படவுள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது, கர்நாடக மாநிலம் கோலாரில் ராகுல்காந்தி பிரச்சாரம் மேற்கொண்டபோது, “நிரவ் மோடி, லலித் மோடி, நரேந்திர மோடி என எல்லா திருடர்களின் பெயர்களுக்கு பின்னேயும் மோடி என வந்தது எப்படி?” என பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுContinue Reading

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நெல்லையில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பைContinue Reading

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளின் நிர்வாகிகளும் பல வகையான கருத்துகளை வெளியிட்டதால் அண்மைக்காலமாக இரு தரப்பினரிடையே பிரச்சனை இருந்துவருகிறது. இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, “2024 மக்களவைத் தேர்தல் கூட்டணியைப் பொறுத்தவரை பேசி முடிவு செய்ய வேண்டியContinue Reading

வருமான வரிச் சட்டத்தில் ரெய்டு என்பது இல்லையென்றும், வரி ஏய்ப்பு தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களின் இடங்களில் சோதனை மேற்கொள்ள வருமான வரிச்சட்டத்தில் அதிகாரம் உள்ளது என்றும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் வருமான வரித் துறை நடத்திய ரெய்டுகளின் விவரங்கள் அப்போது கைப்பற்றபட்ட ரொக்கம் போன்ற தகவல்களைக் கேட்டு விரிவான கேள்வியை திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் திருப்பெரும்புதூர் மக்களவை உறுப்பினருமான டி.ஆர்.பாலு மக்களவையில் எழுப்பி இருந்தார்.Continue Reading

இந்தியாவில் வாய்மொழி அவதூறு வழக்கில் இரண்டாண்டு தண்டனை விதிக்கப்பட்டது வரலாற்றிலேயே இதுவே முதல் முறை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தியின் எம்பி பதவியை பறித்த மோடி அரசை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏ சுப்புராம் தலைமை வகித்தார். சிவகங்கை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் மற்றும்Continue Reading