June 14, 23 அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ள நிலையில் முதலமைச்சரின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அலுவலகத்தில் நேற்று அமலாக்க துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அத்துடன் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. சுமார் 12 மணி நேரம் சோதனை நடைபெற்ற நிலையில், நள்ளிரவு செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலி ஏற்படவே அவர்Continue Reading

June 14, 23 சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறை கைது செய்த நிலையில் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் 6வது தளத்தில் அவர் சிகிச்சையில் உள்ளார். அவர் அனுமதிக்கப்பட்டபோது உயர் ரத்த அழுத்தம் இருந்ததாகவும் அது தற்போது சீராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவர் அனுமதிக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட இசிஜி-யில் மாறுபாடுகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் அவர் தொடர்ந்து மயக்கContinue Reading

June 14, 23 கரூர்: மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கரூரில் பல்வேறு இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். கரூரில் மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வீடு அவரது சகோதரர் அசோக்குமார் வீடு மற்றும் நண்பர்கள் வீடு என 10 இடங்களில் நேற்று (ஜூன் 13) காலை 8 மணி அளவில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனையைத் தொடங்கினர். சோதனையானது பல்வேறு குழுக்களாக பிரிந்துContinue Reading

முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் முழு உருவச்சிலை அமைக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடரில், இன்று (ஏப்.20) காலை கேள்வி நேரத்துடன் பேரவை நிகழ்வுகள் தொடங்கின. அதனைத்தொடர்ந்து 110 விதியின் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அப்போது பேசிய முதல்வர், “மறைந்த முன்னாள் பிரதமர் வி.பி.சிங்கிற்கு இந்த திராவிட மாடல் அரசு, மரியாதை செய்யும் மகத்தான அறிவிப்பை வழங்குகிறேன்.Continue Reading

வாட்ச் பிரச்சினை, சொத்து பட்டியல், ஊழல் பட்டியல், கட்சிக்குள் பங்காளிகள் சண்டை என தமிழ்நாடு அரசியல்களம் படுபிஸியாக பயணித்து கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, தனது அதிகார பூர்வ இணைய பக்கமான TN DIPRயில் வெளியிட்டுள்ள செய்தி, புதுவித சர்ச்சையை கிளப்பியுள்ளது. TN DIPR பக்கத்தில் முதலமைச்சரின் அறிக்கை, சாதனைகள், தமிழ்நாடு அரசின் அன்றாட பணிகள், ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில்,Continue Reading

ஏப்ரல் 17 48 மணி நேரத்திற்குள் அண்ணாமலை பகிரங்க மண்ணிப்புக் கேட்க வேண்டும் என்றும், ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டும் திமுக சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், பாஜக குறித்து ஆதரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதற்காக பதிலுக்கு ரூ. 500 கோடி நஷ்ட ஈடு கேட்டு அண்ணாமலை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதற்கு முன்னர் BGR நிறுவனத்திற்கு முறைகேடாக திமுக வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டுContinue Reading

ஏப்ரல் 16 நீரில் மூழ்கி மரணம் அடைந்த 4 சிறார்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்ப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “திருப்பூர் மாவட்டம், திருப்பூர் தெற்கு வட்டம், முதலிபாளையம் கிராமம், மஜரா சிட்கோ, டி.நகர் என்ற முகவரியைச் சேர்ந்த இனியவன், த/பெ.பாலசுந்தரம் (வயது 12) மற்றும் சந்துரு, த/பெ.பாண்டியராஜன் (வயது 12) ஆகிய இருவரும் நேற்று அப்பகுதியில் உள்ளContinue Reading

சென்னை ராயபுரத்தில் நீர்மோர் பந்தலைத் திறந்துவைத்த முன்னாள் அ.தி.மு.க அமைச்சர் ஜெயக்குமார், “தி.மு.க ஆட்சியில் கருத்துரிமை முழுக்கப் பறிக்கப்பட்டிருக்கிறது. பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவது லைவில் வருவதில்லை. ஏனென்றால், அங்கு சட்டமன்றம் நடக்கவில்லை. ஸ்டாலின் தர்பார்தான் நடந்துகொண்டிருக்கிறது. சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குக்கூட பக்குவமின்றி கேலியும், கிண்டலுமாகத்தான் பதிலளிக்கிறார்கள்” எனக் குற்றம்சாட்டியிருக்கிறார்.Continue Reading

“கடலூர் உள்ளிட்ட காவிரி பாசன மாவட்டங்களில் புதிய நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதி மறுக்க வேண்டும், என்.எல்.சி. நிலக்கரி சுரங்கங்களை விரிவாக்க நிலம் கையகப்படுத்துவதை கைவிட வேண்டும், என்.எல்.சியால் கடலூர் மாவட்டம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட பல்வகை பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும்” என்று வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு பாமக தலைவர் அன்புமணி கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “தமிழகத்தின், குறிப்பாக கடலூர் உள்ளிட்ட காவிரி பாசனContinue Reading

தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன், என தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். “‘தி கிரேட் டிக்டேட்டராக’ தன்னை ஆளுநர் நினைத்துக் கொள்ள வேண்டாம். தமிழ்நாடு சட்டமன்றத்தின் மாண்பினைக் குறைக்கும் வகையில் ஆளுநர் அவர்கள் பேசி வருவது அவருக்கும் அழகல்ல; அவர் வகிக்கும் பதவிக்கும் அழகல்ல”. எதையும் துணிச்சலாக ஏற்கவோ,Continue Reading