கோடை வெயில் காரணமாக ஒடிசாவில் நாளை முதல் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் கோடை விடுமுறையை நாளை (ஏப்ரல் 21ஆம் தேதி) முதல் தொடங்குவதாக அம்மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. முன்னதாக மே 5ஆம் தேதி முதல் விடுமுறைவிடப்படுவதாக இருந்தது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், முதல்வரின் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்தContinue Reading

தர்பூசணி சாகுபடி - விவசாயிகள் கவலை

ஏப்ரல்.18 திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் பயிரிடப்பட்டுள்ள தர்பூசணி, கோடையில் வெயிலால் விளைச்சல் குறைந்துவிட்டதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் அதன் சுற்றுப்பகுதியிகளில் கோடை சீசனை கணக்கில்கொண்டு விவசாயிகள் ஆண்டுதோறும் தர்பூசணி சாகுபடி செய்துவருகின்றனர். கிணற்றுபாசனத்தை வைத்து விவசாயிகள் தர்பூசணியை பரவலாக சாகுபடி செய்கின்றனர். தண்ணீர் வீணாவதைத்தடுக்கும் வகையில், தர்பூசணிக்காக பார் எனப்படும் மேட்டுப்பாத்தி அமைத்து, நீர் ஆவியாகாமல் தடுக்க நிலப்போர்வை போர்த்திContinue Reading

நடப்பாண்டில் கோடை வெயில் முன்னதாகவே துவங்கி வாட்டி வரும் சூழலில் உடுமலை சுற்றுவட்டார பகுதியில் உள்ள மாமரங்களில் பூக்கள் மற்றும் பிஞ்சு உதிர்தல் அதிகரித்து வருவதால் கடந்தாண்டை விட சாகுபடி குறையும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவார கிராமங்களில், மா சாகுபடி அதிகளவு செய்யப்பட்டுள்ளது. மானுப்பட்டி, ஜல்லிபட்டி, கொங்குரார்குட்டை, தளி, பொன்னாலம்மன்சோலை, ராவணாபுரம் உட்பட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில், மானாவாரியாகவும்,Continue Reading

கோவை மாவட்டத்தில் உள்ள கோவைக் குற்றாலத்தில் கொளுத்தும் கோடையைச் சமாளிக்கும் வகையில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து, அருவியில் உற்சாகமாகக் குளித்து மகிழ்ந்தனர். கோவை உட்பட தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைக்காலம் முன்கூட்டியே தொடங்கிவிட்டது. நாளுக்கு நாள் அதிகரித்துவரும் வெயிலால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகிவருகின்றனர். பல மாவட்டங்களில் 100 டிகிரியைத் தாண்டிக் கொளுத்தும் வெப்பத்தால் குழந்தைகள், முதியவர்கள் என பல தரப்பினரும் கடும் சிரமத்திற்கு ஆளாகிவருகின்றனர். கோடையின் கொடுமையிலிருந்துContinue Reading

நீலகிரியில் இன்று 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மலைகளின் ராணி என்றழைக்கப்படும நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோடை சீசனின்Continue Reading