+2 கணிதத் தேர்வில் மாணவர்களுக்கு உதவி – நீலகிரியில் கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் சஸ்பென்ட்
உதகை அருகே பிளஸ்-2 கணித தேர்வில் மாணவர்களுக்கு விடை எழுத உதவியதாக எழுந்த புகாரில் கல்வித்துறை அலுவலர்கள் 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 13-ந் தேதி தொடங்கி 3-ந் தேதி வரையும், பிளஸ்-1 பொதுத்தேர்வு மார்ச் மாதம் 14-ந் தேதி தொடங்கி 4-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு எழுத நீலகிரி மாவட்டத்தில் 41 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.Continue Reading