ஆயிரம் ஏற்பாடுகள் செய்தாலும் சென்னையில் சில்லைறை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ 140 வரை தான் விற்கப்படுகிறது. கோயம்பேடு காய்கறி சந்தையிலும் தக்காளி மொத்த விலையில் மாற்றம் எதுவுமில்லை. அங்கு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 110 ஆக இருக்கிறது. மூன்று நாட்களுக்கு முன்பு மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ 90 ஆக இருந்தது. அதோடு 20 ரூபாய் கூடிContinue Reading

தக்காளி விளையும் நிலத்தில் தங்கம் கிடைக்குமா? விவசாயி ஒருவருக்கு கிடைத்துள்ளது. நாடு முழுவதும் தக்காளி விலை உச்சம் தொட்டுள்ளது. ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு மேல் விற்பனையாகிறது. இன்னும் சில நாட்களில் 300 ரூபாயை எட்டும் என பகீர் தகவல் பரவி வருகிறது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாயி ஒருவர் தக்காளி விற்று ஒரே மாதத்தில் கோடீஸ்வரராகியுள்ளார். அவர் பெயர் துக்காராம் பாகோஜி . புனே மாவட்டம்Continue Reading

மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். பள்ளிப்பருவத்தில் எழுதContinue Reading

ஜுலை,15- இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள், தனிநபர்கள் உள்ளிட்டோரிடம்  கர்நாடக உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி ரித்து ராஜ் அவஸ்தி தலைமையிலான இந்தியாவின் 22-வது சட்ட ஆணையம் கருத்துகளை கேட்டிருக்கிறது. தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் சட்ட  ஆணையத்துக்கு அனுப்பிய அறிக்கையில் பொது சிவில் சட்டத்திற்கு கடுமையான எதிர்ப்புகளை தெரிவித்து இருந்தார். திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள்Continue Reading

மக்களவை தேர்தல் வெற்றிக்கு தென் மாநிலங்களைத்தான் மலை போல் நம்பிக்கொண்டிருக்கிறது  காங்கிரஸ் கட்சி. உத்தரபிரதேசம், மே.வங்காளம் போன்ற பெரிய மாநிலங்களில் அந்த கட்சிக்கு வாய்ப்பே இல்லை. உ.பி.யில் சோனியா ஜெயிக்கலாம். மம்தா கோட்டையில், காங்கிரசின் அடித்தளம் ரொம்பவும் பலவீனமாக இருக்கிறது. பீகார், மகாஷ்டிரா ஆகிய மாநிலங்களில் கூட்டணி கட்சிகளை நம்பியே காங்கிரஸ் உள்ளது ராஜஸ்தான், சத்தீஷ்கர்,இமாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் ,மக்களவை தேர்தலில் காங்கிரசுக்கு வெற்றி கிடைக்கும் எனContinue Reading

ஜுலை,15- இன்று( ஜுலை 15 ) பெருந்தலைவர் காமராஜரின் 120- வது பிறந்தநாள். அவரை, தமிழ்த்திரை உலக ஜாம்பவான்களான சிவாஜியும் கண்ணதாசனும் உயிருக்கு உயிராக நேசித்தனர். கடைசி காலம் வரை பூஜித்தனர். இருவருமே தங்கள் படங்களில் காமராஜர் புகழ் பாட தவறுவதில்லை. ஒரு சில பாடல்கள் இங்கே. 1971- ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோற்றுப்போனது. கட்சி தொண்டர்களை உயிர்ப்புடன் இருக்கச்செய்வதற்காக காமராஜர் புகழ்பாடி கண்ணதாசன்’ பட்டிக்காடா !Continue Reading

வித்தியாசமான கதை களத்தில் படங்களை உருவாக்கும் கவுதம் வாசுதேவ் மேனன், கமலஹாசன், சூர்யா, சிம்பு உள்ளிட்ட  நடிகர்களுக்கு வெற்றிப்படங்களை கொடுத்தவர். கடந்த 2006 ஆம் ஆண்டு  கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் திரைக்கு வந்த படம், ‘வேட்டையாடு விளையாடு’ . இதில் டிஜிபி ராகவன் என்ற கேரக்டரில் கமல்ஹாசன் நடித்திருந்தார்.  ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ், டேனியல் பாலாஜி  உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, ஹாரிஸ் ஜெயராஜ் இசைContinue Reading

ஜுலை, 14- சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்ட விரோதமானது  அல்ல என்று நீதிபதி பரத சக்கரவர்த்தி அளித்த தீர்ப்பை ஏற்பதாக  மூன்றாவது நீதிபதி கார்த்திகேயன் தீர்ப்பளித்துள்ளார். சட்ட விரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த ஆட்கொணர்வு மனு மீது அவர்Continue Reading

பருவமழையால் டெல்லி, இமாச்சலபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இமாச்சலபிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.42 பேர் இறந்து போனார்கள். டெல்லியில் வெளுத்து வாங்கிய மழையால் தலைநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் யமுனை ஆற்று நீரின் அளவு 208 மீட்டரை தாண்டியுள்ளது. முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.உச்ச நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்லும் சாலைகளும்Continue Reading

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தை , கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் டைரக்டு செய்துள்ளார். மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் ,தமன்னா, பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் என  பெரிய நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடித்துள்ளது. முத்துவேல் பாண்டியன் எனும் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடித்துள்ளContinue Reading