மக்களவை  தேர்தல் அடுத்த ஆண்டு  ஏப்ரல் அல்லது மே மாதத்தில்  நடைபெற உள்ள நிலையில்,பாஜகவை தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. எதிர்க்கட்சிகள் பாட்னாவில்  ஏற்கனவே  முதல் கட்ட  ஆலோசனையை முடித்துள்ளன. அடுத்த கூட்டம் பெங்களூருவில்  17- ஆம் தேதி நடைபெற உள்ளது. பாட்னா கூட்டத்தில் கலந்து கொள்ளாத சோனியா காந்தி இந்தக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெங்களூர் கூடத்தில பங்கேற்க இருப்பதாக தெரிவித்து இருக்கிறார். எதிர்க்கட்சிகள் Continue Reading

ஜூலை, 13- சென்னையில் திருட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய 24 வயது இளைஞர் உயிர் இழந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் நல்லான் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை எம்ஜிஆர் நகர் போலீசார், வீடு ஒன்றில் இருந்து நகை காணமல் போனது தொடர்பாக புதன்கிழமை அன்று அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். பிறகு ஶ்ரீதரை இன்று (Continue Reading

ஜுலை, 13- முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். பள்ளிப்பருவத்தில் எழுத ஆரம்பித்தவர், 94 வயது வரை எழுதிக்கொண்டே இருந்தார்.அவர் தொடாத துறைகளே இல்லை.’எழுத்தாளர்’கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில்Continue Reading

ஜுலை, 13 – கண்ணதாசன், வாலிக்கு;g பிறகு தமிழ் திரை உலகுக்கு கிடைத்த கவிதைப் புதையல் வைரமுத்து. எதிர்மறை அர்த்தத்தைக் கொண்ட நிழல்கள் படம் மூலம் 1980 ஆம் ஆண்டு சினிமாவுக்கு வந்தவர்,நமது கவியரசர்.43 ஆண்டுகளாக உச்சத்தில் நிற்கிறார். பத்மஸ்ரீ,பத்மபூஷன்,தேசிய விருது, சாகித்ய அகாடமி என அனைத்து விருதுகளும் இவரை தேடி வந்தன. தமிழில் கவிதை தொகுப்பு, நாவல்கள் என 37 நூல்கள் இயற்றியுள்ளார்’கள்ளிக்காட்டுஇதிகாசம்’ இவருக்கு சாகித்ய அகாடமி விருதைContinue Reading

பெருக்கெடு்த்து ஓடும் யமுனா ஆறு தலைநகர் டெல்லியின் தாழ்வான இடங்களில் புகுந்து விட்டது. நேற்று பகலை விட இரவில் யமுனையின் நீர்மட்டம் மேலும் அதிகரித்ததே இதற்கு காரணமாகும். சாலைகளையும் வீடுகளையும் தண்ணீர் சூழ்ந்ததால் டெல்லி அரசு அவசரக் கால நடவடிக்களை இரவில் எடுக்க நேரிட்டது. அரியானா மாநிலத்தில் உள்ள ஹத்னி குண்ட் அணையில் இருந்து திறந்து விடப்படும் உபரி நீர் அளவு அதிகரிக்கப்பட்டதே யமுனையில தண்ணீர் மட்டும் உயருவதற்கு காரணமாகும்.Continue Reading

இந்திய சினிமாவை உலக அளவில் கவனிக்க வைத்தவர்களில் முக்கியமானவர் ராஜமவுலி. பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு ஆகிய படங்கள் இவருடைய இயக்கத்தின் மகுடங்கள். காட்சி அமைப்புகள்,கதை சொல்லும் விதம் என அனைத்திலும வித்தியாசம் காட்டி ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் ராஜமவுலி. பாகுபலிக்குப் பிறகு அவர் இயக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’. படமும் இன்னுமொரு வெற்றிக் காவியம். அந்த படத்தில் இடம்பெற்று உள்ள ‘நாட்டு நாட்டு’ பாடல் உலகின் உயரிய திரை விருதான ஆஸ்கர்Continue Reading

பிரமாண்ட படங்களின் பிதாமகனான இயக்குநர் ஷங்கர்,ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர். எஸ்.ஏ.சி.யின் மகன் விஜயை வைத்து அவர் ஜீன்ஸ் படத்தை  இயக்குவதாக இருந்தார். இந்தப்படத்துக்காக ஷங்கர் கேட்ட தேதிகள் மலைக்க வைப்பதாக இருந்ததால் விஜய், அதில் நடிக்கவில்லை. இந்திப்படமான ’த்ரி இடியட்ஸ்’ தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டபோது  ஷங்கருடன் விஜய் இணையும் வாய்ப்பு உருவானது. ‘நண்பன் ‘ என்ற பெயரில் தயாரான அந்தப் டம் பெரிய வெற்றி அடைந்தாலும் மீண்டும்  ஷங்கர்-விஜய்Continue Reading

அண்ணாத்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.அடுத்த மாதம் வெளியாகும் இந்த படத்தில் இடம் பெறும் ‘காவலா’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது வெளியான சில நாட்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான  பார்வையாளர்கள், இந்தப்பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர். ஜெயிலர் படத்தை முடித்த கையோடு ஓய்வு ஏதும் எடுக்காமல் ’லால் சலாம்’ படத்தின் ஷுட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாContinue Reading

ஜுலை,12- தனியார் தொலைக்காட்சிகளில் புதிய சினிமாக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, தமிழக  திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்குரல் எழுப்பினர். ‘தியேட்டர்களில் படங்கள் வெளியாகி , 6 மாதங்கள் கழித்தே டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும்’ என கெடு வைத்தனர். இந்த கோரிக்கையை, சில தயாரிப்பாளர்களே ஏற்கவில்லை. தியேட்டரில் வெளியாகி ஓடாத படங்களை நல்ல விலைக்கு தனியார் தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் விற்று காசு பார்த்தனர். ஒடாத அந்த படங்கள் சில நாட்களிலேயே டிவிக்களில் ஒளிபரப்பானது. தியேட்டர்Continue Reading

ஜுலை,12- தேனி அல்லிநகரத்தில் இருந்து சினிமா கனவில் சென்னை நகருக்கு வந்த பாரதிராஜாவை அடையாளம் கண்டு, அவரை இயக்குநர் ஆக்கியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ராஜ்கண்ணு தயாரித்த 16 வயதினிலே படம், தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது. கனவு தொழிற்சாலைக்குள்  நட்சத்திரங்கள், இயக்குநர்கள் போன்ற புதிய வரவுகளுக்கு பாதை போட்டது ராஜ்கண்ணுவின் அந்தப்படம் தான். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,Continue Reading