சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட ஒன்றரை வயது குழந்தையின் வலது கை பின்னர் அகற்றபப்பட்டது சர்ச்சையாகி வருகிறது. இது குறித்து மருத்துவமனை முதல்வர் தேரனி ராஜன் செய்தியாளர்களிடம்  கூறியதாவது.. குழந்தை குறை மாதத்தில் பிறந்தது. தலையின் சுற்றளவும் அதிகமாக இருந்தது. அதனால் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்ட போது தலையில் நீர் கோர்த்திருப்பது தெரியவந்தது. எனவெ  தலையில் விபி ஸ்டன்ட் என்றContinue Reading

ஜுலை, 3 –    தேசிய வாத காங்கிரஸ் கட்சி இரண்டாக  உடைந்த நிலையில்  அதன் தலைவரும் நாட்டின் மூத்த அரசியல் தலைவருமான சரத்பவாரை காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி,மல்லிகார்ஜுன் கா்கே, ராகுல் காந்தி ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மராட்டிய மாநிலத்தில் நேற்று ( ஞாயிற்றுக் கிழமை) நிகழ்ந்தஅதிரடி அரசியல் மாற்றம் நாடு முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படு்த்தியது. எதிர்க்கட்சி தலைவரே ஆளும் பா.ஜ.Continue Reading

ஜுலை, 2- சினிமாவை கனவுத் தொழிற்சாலை என்பார்கள். பெரும் பட்ஜெட்டில் தயாராகும் உச்ச நட்சத்திரங்கள் படங்கள் படுதோல்வி காணும். குறைந்த செலவில் உருவாகி, எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளிவரும் திரைப்படம், அதிரி புதிரி ஹிட் அடிக்கும். ஒரு தலை ராகத்துக்கு முன்பாகவே இந்த மேஜிக் தொடங்கி இருக்கலாம். சில மாதங்களுக்கு முன் வந்த படங்களில் அப்படி ஒரு மாயாஜாலம் நிகழ்த்திய படம் ‘லவ்டுடே’. சில நாட்களுக்கு முன் ரிலீஸ் ஆனContinue Reading

எதையாவது செய்வது, அல்லது எதையாவது பேசுவது என்பது தமிழக ஆளுநருக்கு வழக்கமாகி விட்டது. செந்தில்  பாலாஜி டிஸ்மிஸ் விவகாரத்தில் கண்டனங்கள் ஓயாத நிலையில் அவர் சனாதனம் பற்றி பேசி புதிய விவாதத்தை உருவாக்கி இருக்கிறார். சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள  ராகவேந்திரா மடத்தின் பொன்விழா  நிகழ்வில் பங்கேற்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது.. 400 ஆண்டுகளுக்கு முன்பு ராகவேந்திரர் இந்த மண்ணில் பிறந்தார். மனித நேயம் தழைத்தோங்க வாழ்ந்தார். தமிழ்நாடு புனிதமானContinue Reading

வட  கிழக்கு மாநிலமான  மணிப்பூர் இரண்டு மாதமாக பற்றி எரிகிறது. இரு குழுக்கள் ஆயுதங்களுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்கிறார்கள்.வன்முறையை ஒடுக்க முடியாமல் ராணுவம் திணறிக்கொண்டிருக்கிறது. என்ன காரணம்? மியான்மருடன் 400 கி.மீ.எல்லையை பகிர்ந்து கொள்ளும் மணிப்பூர் மாநிலம், மலைகளும், பள்ளத்தாக்குகளும் சூழ்ந்த பகுதி. மெய்திகள் எனும் சமூகத்தினர் பெரும்பான்மையாக உள்ளனர்.மொத்த மக்கள் தொகையில் அவர்கள் 53 சதவீதம் பேர். அதற்கு அடுத்து குகி சமூகத்தினர்  30 சதவீதம் பேர் வாழ்கிறார்கள்.Continue Reading

பாபா படத்தின் தோல்வியால் ரஜினிகாந்த் துவண்டிருந்த நேரம் அது.கன்னடத்தில் தான் இயக்கி வெற்றிபெற்ற படத்தின் கதையை ரஜினிக்கு சொன்னார்,டைரக்டர் பி.வாசு. ரஜினியை அந்தக்கதை ரொம்பவே ஈர்த்தது. அடுத்த நொடியே ஓகே சொல்லிவிட்டார். அந்த கதையை நடிகர் பிரபுவிடமும் பகிர்ந்திருந்தார் வாசு.அப்புறம் தான் அந்த மேஜிக் நிகழ்ந்தது. சிவாஜி  புரொடக்ஷன்ஸ் சார்பில் பிரபுவே படத்தை தயாரிக்க சந்திரமுகி என படத்துக்கு பெயர் சூட்டினார்கள்.2005 ஆண்டு கமலின் மும்பை எக்ஸ்பிரஸ், விஜயின் சச்சின்Continue Reading

தாசில்தார் ஒருவர் 1000 கோடி ரூபாய்க்கு சொத்துக்களை குவித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்து இருக்கிறார். அதுவும் 42 வயதாகும் இந்த தாசில்தார் வேலையில் சேர்ந்து ஏறத்தாழ 15 ஆண்டுகள்தான் ஆகின்றன. அஜித்குமார் ராய் என்ற இவர் பெங்களூர் கே.ஆர்.புரம் தாசில்தார். கர்நாடக மாநில லோக் ஆயுக்தா ( லஞ்ச ஒழிப்பு) போலிசார் மாநிலம் முழுவதும் கடந்த புதன் கிழமை அன்று அதிரடி சோதனையை மேற்கொண்டனர். மாநில அரசு அதிகாரிகள் 15Continue Reading

தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவதாஸ் மீனாவும் சென்னை மாநகர காவல் துறை தலைவராக பதவி வகித்து வந்து சங்கர் ஜிவால் மாநில டி.ஜி.பி.யாகவும்  நியமிக்கப்பட்டு உள்ளனர். மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு பொறுப்பேற்றது முதல், தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பும் டிஜிபியாக இருந்த சைலேந்திர பாபுவும் ஓய்வு பெறுவதை அடுத்து இந்த நியமனங்கள் நடைபெற்று உள்ளன. ராஜஸ்தான் மாநிலத்தில் பிறந்த சிவ்தாஸ் மீனா, 1989-ல்Continue Reading

ஜுன்- 29. டெல்லியில் பிரதமா் நரேந்திர மோடி இல்லத்தில் நேற்றிரவு ( புதன் கிழமை இரவு)  நீண்ட நேரம் நடைபெற்ற ஆலோசனையில் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெற உள்ள ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டு உள்ளது. கூட்டத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, உள் துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் கட்சியின் முன்னணி  தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். மூன்று மணி நேரத்திற்கும் அதிகமாக இந்த கூட்டம்Continue Reading

கமல்ஹாசனும் ஷங்கரும் இந்தியன் படத்தில் முதன் முதலாக கை கோர்த்தனர்.படம் இமாலய வெற்றி பெற்றது.இதன் தொடர்ச்சியாக இந்தியன் -2 படத்தில் இரு ஜாம்பவான்களும் இணைந்துள்ளனர். லைகா நிறுவனமும் ,உதயநிதியின் ரெட்ஜெயண்ட் நிறுவனமும் கூட்டாக இந்தப்படத்தை தயாரிக்கிறது.அனிருத்இசை அமைக்கிறார். காஜல் அகர்வால், சமுத்திரக்கனி, பாபிசிம்ஹா,சித்தார்த், ராகுல் பிரித்சிங் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். கொரோனா உள்ளிட்ட தடைகளால் 6 ஆண்டுகளாக நீடித்த இதன் படப்பிடிப்பு முடியும் தருவாயில் உள்ளது.பொங்கல் பண்டிகையில் ரிலீஸ் செய்ய திட்டம்.Continue Reading