ஜுலை, 30- வினோத் ராஜேந்திரன் இயக்கத்தில் நடிகர் சார்லி முக்கிய வேடத்தில் நடிக்கும் திரைப்படம் ‘ஃபைண்டர்’. இந்தப்படத்தில் செண்ட்ராயன், அபிலாஷ், கோபிநாத், சங்கர், தாரணி பிரானா ஆகியோரும்  நடித்துள்ளனர். சூர்ய பிரசாத் இசையமைத்துள்ள  இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக  கவிஞர் வைரமுத்து  பங்கேற்றார். அவரது உரை இது: சினிமாவின் முதல் ரசிகனும் நான்தான், கடைசி உழைப்பாளியும் நான்தான். சினிமா என்பது  பொழுதுபோக்கு மட்டும் இல்லைContinue Reading

ஜுலை,29- பாகிஸ்தானில் இருந்து பலுசிஸ்தான் மாகாணம் பிரிந்து தனி நாடாவதற்கு இந்தியா உதவ வேண்டும் என்று கனடாவில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் நெய்லா குவாட்ரி கேட்டுக் கொண்டு உள்ளார். பாகிஸ்தானில் பிறந்து கனடா நாட்டு குடியுரிமை பெற்று அங்கு வசிக்கும் நெய்லா இந்தியாவின் ஹரித்துவார் நகரத்திற்கு வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பலுசி்ஸ்தான் மாகாணம் விடுதலை பெறுவதற்கு ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா.) பிரதமர்Continue Reading

ஜுலை,29- மக்களவை தேர்தலில் பாஜகவை வீழ்த்தும் நோக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடை பயணத்தை கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தொடங்கினார். தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 12 மாநிலங்களை கடந்து வந்த இந்த யாத்திரை ஸ்ரீநகரில்  ஜனவரி 30 ஆம் தேதி நிறைவடைந்தது.  மொத்தம் . 4,000 கி.மீ. ராகுல் நடந்தார். மக்களவை தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் உள்ள நிலையில் ராகுல், தனதுContinue Reading

ஜுலை,29- கிருஷ்ணகிரி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட விபத்தில்  9 பேர் உயிரிழந்தனா். பழைய பேட்டை என்ற இடத்தில் இருந்த குடோனில் ஏராளமான அளவு பட்டாசு இருப்பு வைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த பட்டாசுகள் இன்று காலை திடீரென வெடித்துச் சிதறியது. குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடோன் இருந்ததால் அருகில் இருந்து வீடுகளும் இடிந்து தரைமட்டமானது. காவல் துறையினரும் தீ அணைப்புத் துறையினரும் சம்பவ இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.Continue Reading

ஜுலை, 29- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு துப்பாக்கி கொடுத்து மணிப்பூருக்கு அனுப்பி வைக்கச் சொன்ன பத்ரி சேஷர்த்ரி என்பவை பெரம்பலூர் மாவடட் போலிசார் கைது செய்து உள்ளனர். சென்னையை சேர்ந்த இவர் கிழக்கு பதிப்பகம் என்ற பதிப்பகத்தின் உரிமையாளரும் ஆவார். ஆர்.எஸ்.எஸ். இயக்கச் சிந்தனையாளரான பத்ரி கடந்த சில ஆண்டுகளாக தொலைக்காட்சி விவாதங்களில் பாரதீய ஜனதா கட்சியை ஆதரித்து பேசுகிறவராக தன்னை அடையாளப் படுத்திக் கொண்டார். மணிப்பூர் மாநிலத்தில் கடந்தContinue Reading

ஜுலை,29- மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தியே தீருவது என கங்கணம் கட்டிக்கொண்டு கோதாவில் குதித்துள்ள எதிர்க்கட்சிகளின் செயல்பாடுகள் வேகமெடுத்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 26 கட்சிகள் ஒரே அணியில் இணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி நடந்தது, அந்த மாநில முதலமைசர் நிதிஷ்குமார், முதல் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இரண்டாவது கூட்டம் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் கர்நாடக மாநிலம்Continue Reading

ஜுலை, 29- தமிழ் சினிமாவில் பெண் வேடமிட்டு பல நடிகர்கள் நடித்துள்ளனர். ஆணழகன் படத்தில் பிரசாந்துக்கு பெண் வேடம் கச்சிதமாக பொருந்தி இருந்தது. பாட்டாளி, மனதை திருடி விட்டாய் உள்ளிட்ட 10 படங்களில் வடிவேலு பெண் வேடமிட்டு கலக்கி இருந்தார். ஆயிரம் இருந்தாலும் அவ்வை சண்முகியில் கமல்ஹாசன் போட்ட பெண் வேடம்,’அடிச்சுக்க ஆளில்லை’ ரகம். கடந்த 1996-ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில்  வெளியான  ‘அவ்வை சண்முகி’யில் வயதான பெண் வேடத்தில்Continue Reading

ஜுலை,29- சென்னை அருகே  இன்று அதிகாலை, பேருந்து ஒன்று லாரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பயணிகள் 22 பேர் நூலிழையில் உயிர் தப்பினார்கள். பெங்களூரில் இருந்து சென்னை கோயம்பேடு நோக்கி வந்த குளிர் சாதன பேருந்தில் பயணிகள் 22 பேர் இருந்தனர்.  பேருந்த கிட்டத்தட்ட கோயம் பேட்டை நெருங்கிவிட்ட வேளையில் வேலப்பன்சாவடி சந்திப்பில் லாரி மீது மோதி விபத்துக்கு ஆளானது. பேருந்தில் இருந்த 22 பயணிகளும் பின் பக்க கண்ணாடியை உடைத்துக்Continue Reading

ஜுலை,29- குறைவது போல போக்குக் காட்டிய தக்காளி விலை மீண்டும் உச்சத்தை தொட்டு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. கடந்த மூன்று தினங்கள் முன்பு சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 130 அல்லது 140 ரூபாய் என்ற நிலையில் இருந்த தக்காளி இப்போது கிலோ 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னை கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மொத்த விற்பனையில் கடந்த இரு தினங்கள் முன்பு 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டContinue Reading

பெரிய நடிகர்கள் படங்களில், அண்டை மாநில உச்ச நட்சத்திரங்கள் கவுரவ வேடங்களில் நடிப்பது புதிய விஷயமல்ல. ரஜினியின் மாப்பிள்ளை படத்தில் தெலுங்கு சூப்பர்ஸ்டார் சிரஞ்சிவி, சண்டை காட்சி ஒன்றில் நடித்திருந்தார். சரத்குமார் நடித்த நாட்டாமை படம் தெலுங்கில் பெத்தராயுடு என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.மோகன்பாபு கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் ரஜினிகாந்த், கெஸ்ட் ரோலில் நடித்து கொடுத்தார். இந்நிலையில் ஷாருக்கான் நடித்த ‘ஜவான்’ படத்தில், சிறப்புத்தோற்றத்தில் விஜய் நடித்துள்ளதாக தகவல்Continue Reading