தமிழ்நாடு என்றவுடன் அதன் கலாச்சார விழுமியங்கள் எப்படி நினைவுக்கு வருகிறதோ, அதே போல நாளுக்கு நாள் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வளர்ச்சி, அபரிவிதமாய் வளர்ச்சி காண்கிறது என்பதனையும் எவராலும் எளிதில் மறுத்துவிட முடியாது. தலைநகர் சென்னை தொடங்கி, ஒவ்வொரு மாவட்டத்தின் மூலை முடுக்கிலும் வளர்ச்சி என்பது வரலாறு பதித்து வருகிறது. அந்த வகையில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமும், 270 பேருந்துகளையும், 2 லட்சம் பயணிகளையும் கையாளும் திறன் கொண்ட சென்னைContinue Reading

ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வரும் 15-ம் தேதி ஈரோடு வரவுள்ளதாக வீட்டு வசதித்துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் பெரியசேமூரில் நடைபெற்ற தொண்டர்கள் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.முத்துச்சாமி பேசினார். அதில், எல்.பி.பி கால்வாய் நவீனமயமாக்கல் பணியை மேற்கொள்ள உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, திட்டத்தை எதிர்க்கும் மற்றும் ஆதரிக்கும் விவசாயிகள் குழுக்களிடம் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றார். இந்த திட்டத்திற்குContinue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், மாவட்ட எஸ்.பி.சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டுContinue Reading

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்றும், நாளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னடலுடன் கூடிய இலேசானது முதல் மிதமானது வரைContinue Reading

நாகர்கோயிலில் பாஜகவினருடன் ஏற்பட்ட மோதல் தொடர்பாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலையில் பாஜகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ளது. இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து, இளைஞர் காங்கிரஸார் நாகர்கோவிலில் உள்ள பாஜக அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக அலுவலகத்தில் இருந்த மாவட்டத் தலைவர் தர்மராஜன் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர்Continue Reading

கோவையில் புகழ்பெற்ற மருதமலை சுப்பிரமணியசாமி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா இன்று காலை தொடங்கியது. பக்தர்களின் வசதிக்காக கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதத்தில் வரும் பவுர்ணமியில் அனைத்து முருகன் கோவில்களிலும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு, கோவையை அடுத்த மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் பங்குனி உத்திர திருவிழா இன்று முதல் 2Continue Reading

அரியானா மாநிலத்தில் நடைபெற்ற 2023 MTB சைக்கிள் சாம்பியன்ஷிப் போட்டியில் கோவையைச் சேர்ந்த 3 மாணவர்கள் சாம்பியன்ஷிப் பதக்கங்களை வென்றனர். சொந்த ஊர் திரும்பிய அவர்களுக்கு கோவையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது, அரியானாவில் கடந்த மார்ச் 28ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை 19வது தேசிய மவுண்டன் பைக் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு எம்.டி.பி. சைக்கிள் ஓட்டுதல் அணி சார்பில் 16 சைக்கிள் வீரர்கள்Continue Reading

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்இந்தியப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்குத் திசை காற்றும், மேற்குத் திசைக் காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு சில இடங்களில் இடி மின்னடலுடன் கூடியContinue Reading

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி, திமுகவில் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுகவின் முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, திமுக-வில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி,Continue Reading

தமிழகத்தில் தயாரிக்கப்படும் மணப்பாறை முறுக்கு, ஊட்டி வரிக்கி, நெகமம் காட்டன் சேலை உள்ளிட்ட 11 பொருட்களுக்கு புவி சார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவுசார் சொத்துரிமை வழக்கறிஞர் சங்கத் தலைவர் சஞ்சய் காந்தி தெரிவித்துள்ளார். கடந்த 1999-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட புவிசார் குறியீடு சட்டம் 2003-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இதுவரை, இந்தியாவில் 435 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. தமிழகத்தில் இதுவரை 45 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. இதில்Continue Reading