திருவாரூரில் புகழ்பெற்ற தியாகராஜர் கோயில் ஆழித்தோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். சைவத் தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழாவின் நடைபெறும் ஆழித்தேரோட்டம் உலகப் புகழ்பெற்றது. அதன்படி இந்த ஆண்டுக்கான பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் ஏப்.1ஆம் தேதி காலை 7:30 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ மற்றும் திருவாரூர்Continue Reading

தூத்துக்குடி மாநகராட்சியில் நடைபெற்றுவரும் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவடையும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாநகராட்சியில் சுமார் ஆயிரம் கோடி மதிப்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை, கழிவுநீர் கால்வாய், பூங்கா அமைப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்றுவருவதாக பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி நிலவிவந்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி கூட்டContinue Reading

நீலகிரியில் இன்று 136-ஆவது ஆண்டு குதிரை பந்தயம் கோலாகலமாகத் தொடங்கியது. இதனை பெண்கள் மற்றும் குழந்தைகள் ஏராளமானோர் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர். மலைகளின் ராணி என்றழைக்கப்படும நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் களைகட்டத் தொடங்கியுள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் காலத்தில் நிலவும் இதமான காலநிலையை அனுபவிக்க உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகைதருவார்கள். அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில், கோடை சீசனின்Continue Reading

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5வயது மகனும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 2 பேர் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற மக்கள், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர்.Continue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டு காவல்துறையால் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட நபர்கள் சென்னையில் உள்ள மாநில மனித உரிமை ஆணையத்தில் விசாரணைக்காக ஆஜராகினர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் சரகத்தில் உதவி காவல்துறை கண்காணிப்பாளராகப் பணியாற்றிய பல்வீர்சிங், குற்ற வழக்குகளில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக வெளியாக புகார் பல்வேறு தரப்பிலும் பெரும் அதிர்வலையை உருவாக்கியது. இதைத்தொடர்ந்து, உதவி காவல்துறை கண்காணிப்பாளர் பல்வீர்சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.Continue Reading

கோவை மாவட்டத்தை “விபத்தில்லா கோவை”யாக உருவாக்கும் நோக்கத்தில் மாநகரின் 6 இடங்களில் காவல்துறை சார்பில் சிறப்பு வாகனத் தணிக்கை முகாம் நடத்தப்பட்டது. கோவை மாநகரத்தில், வாகன விபத்துகள் நடைபெறாமல் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு, “விபத்தில்லா கோவையாக” உருவாக்கும் பொருட்டு, கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவுப்படி, கோவை மாநகரில் 6 இடங்களில் (பொள்ளாச்சி ரோடு – ரத்தினம் காலேஜ், பாலக்காடு ரோடு – நேரு காலேஜ், பேரூர் பைபாஸ் ரோடுContinue Reading