திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததைக் கண்டித்து நூதன போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால், சமீபContinue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில், திங்கள்கிழமை முதல் விசாரணை நடைபெறும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள்,Continue Reading

கோவை வ.உ.சி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்த புகைப்பட கண்காட்சியினை நேரில் பார்வையிட்ட இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், முதல்வரை சிலையாக வைக்கப்பட்டது தனக்கு பிடித்திருந்ததாக தெரிவித்தார். கோவை வ.உ.சி பூங்காவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்பான, “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள புகைப்பட கண்காட்சியினை இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.வி.பிரகாஷ், “எங்கள் முதல்வர் எங்கள் பெருமை” என்று இங்கு வைக்கப்பட்டுள்ளContinue Reading

சென்னை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநிலத்தின் முக்கிய பிரச்சனைகள் தொடர்பான கோரிக்கை மனுவை அளித்தார். தமிழகத்தில் சென்னை- கோவை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நேற்று பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். பின்னர், மைசூர் திரும்புவதற்கான சென்னை விமானநிலையத்திற்கு சென்ற மோடியை, தமிழ்நாடு முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் சந்தித்து 20 நிமிடங்கள் வரை பேசினார். அப்போது,Continue Reading

கோவை – சென்னை இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. வாரத்தில் புதன்கிழமை தவிர மற்ற எல்லா நாட்களும் இயக்கப்படவுள்ள இந்த ரயிலில் பயணம் செய்வதற்கான கட்டண விவரங்களை ஐஆர்சிடிசி இணையதளம் வெளியிட்டுள்ளது. நாட்டின் முக்கிய வழித் தடங்களில் வந்தே பாரத் என்ற அதிநவீன அதிவிரைவு சொகுசு ரயில் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் சென்னை-கோவை இடையே புதிதாக வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடிContinue Reading

தமிழகத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடை உத்தரவை மாற்றி அமைக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டில் பிளாஸ்டிக் பொருட்கள் தடைக்கான ஆணையை உறுதிசெய்த உத்தரவை, மறுஆய்வு செய்யக் கோரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில், பால் மற்றும் பால் பொருட்கள்,Continue Reading

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்துள்ள மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற பருத்திக்கான மறைமுக ஏலத்தில் ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 550 ரூபாய்க்கு பருத்தி விற்பனையானது. திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி விற்பனை மறைமுக ஏலம் நடைபெற்றது. இதில், திருப்பூர் கரூர் திருச்சி திண்டுக்கல் ஈரோடு,கோவை மாவட்டங்களை சேர்ந்த 785 விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இதனிடையே,Continue Reading

பிளஸ் 2 பொதுத்தேர்வில் கணிதப் பாடத்திற்கு கூடுதலாக 5 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வு துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் நடப்பு ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த 13-ந்தேதி தொடங்கி, கடந்த 03ம் தேதி நிறைவு பெற்றது. பொதுத்தேர்வின் கடைசி நாளில், பிளஸ்-2 மாணவ-மாணவிகள் வேதியியல், கணக்கு பதிவியியல், புவியியல் ஆகிய பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இதனை தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி வருகிற 10-ந் தேதி முதல் 21-ந்Continue Reading

நான் தமிழ் மொழியை, தமிழ் கலாசாரத்தை நேசிக்கிறேன் என பிரதமர் மோடி கூறியுள்ளார். சென்னை விமான நிலையம், சென்ட்ரல் ரெயில் நிலையம், பல்லாவரம் ராணுவ மைதானம், சென்னை விவேகானந்தர் இல்லம் ஆகியவற்றில் நடக்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி, சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய முனையத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். ரூ.1,260 கோடி செலவில் சர்வதேச தரத்தில்Continue Reading

கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு இரண்டாவது நாளாக குவிந்த சுற்றுலாப் பயணிகள் வருகையால் போக்குவரத்து முடங்கியது. கொடைக்கானலில் கடந்த இரண்டு வாரங்களாக பரவலாக தினமும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் குளுமையான சீதோஷ்ன நிலை ஏற்பட்டு வருகிறது. இதனைத்தொடர்ந்து, ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலில் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர். சுற்றுலா இடங்களான வெள்ளிநீர் வீழ்ச்சி,பில்லர் ராக்,மோயர் பாயிண்ட்,ரோஜாத் தோட்டம்,தாவரவியல்Continue Reading