டிசம்பர்-25. அமைதியை போதித்த ஏசுநாதர் பிறந்த தினத்தை உலகம் கொண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் உக்ரைன் நாட்டில் பல லட்சம் மக்கள் மின்சாரம் இல்லாமல் இருளில் மூழ்கிக் கிடக்கும் பரிதாப தகவல் வெளியாகி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வரும் போரின் உச்சக்கட்டமாக உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களான கிரிவி ரிக் மற்றும் காா்கிவ் மீது ரஷ்யா பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியது. மின் கட்டமைப்பைContinue Reading

டிசம்பர் -25, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான பகத் பாசில் இந்திப் படத்த்தில் நடிக்க இருக்கும் தகவல் அவருடைய ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது. மலையாளப் படத்தில் அறிமுகமானாலும் பகத் பாசில் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்களிலும் நடித்து வருகிறார். வேட்டையன், மாமன்னன், விக்ரம் போன்ற முக்கியமான வெற்றிப் படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அவர் பிடித்தமான நடிகராக உள்ளார். தெலுங்குப் படங்களான புஷ்பா-1 மற்றும் புஷ்பா-2 ஆகியContinue Reading

டிசம்பர்-25. கிண்டியில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் நேற்றிரவு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் சென்னை நகரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு காவல் துறை மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டு இருக்கிறது. நேற்றிரவு உணவு அருந்திவிட்டு அந்த மாணவியும் சக மாணவரானஅவருடைய காதலனும் பேசிக்கொண்டிருந்து உள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அந்த மாணவரை அடித்து விரட்டிContinue Reading

டிசம்பர்-25. அஜர்பைஜான் நாட்டில் இருந்து 67 பேருடன் ரஷ்யா சென்ற விமானம் கஜகஸ்தானில் விழுந்து நொறுங்கிய விபத்தல் 42 பேர் இறந்துவிட்டனர். பயணிகளில் 25 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாக கஜஸ்கஸ்தான் நாட்டு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். அஜர் பை ஜானில் தலைநகரமான பாகுவில் இருந்து ரஷ்யாவின் கிரோஷினி நகரத்துக்கு சென்று கொண்டிருந்த போது திடீ ரென தீ பிடித்து உள்ளது. உ டனே கஜகஸ்தான் நாட்டின் அக்தாவ் விமான நிலையத்தில்Continue Reading

டிசம்பர்-25. தமிழ் நாடு ஆளுநர் ரவி மாற்றப்பட வேண்டும் என்று பல் வேறு கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் அவரை மாற்றாதது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்து உள்ளது. ஏன் என்றால் பல்வேறு மாநில ஆளுநர்களை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மாற்றம் செய்து நேற்று உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஒடிசா ஆளுநர் ரகுபர் தாஸ் ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர் அந்த மாநிலத்திற்கு மிசோரம் ஆளுநராகContinue Reading

டிசம்பர்-24, புதுச்சேரி பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை ஆல்-பாஸ் வழங்கும் முறை ரத்து. புதுச்சேரியில் உள்ள பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டமே உள்ளது; மத்திய அரசின் உத்தரவு பொருந்தும்-புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம்.Continue Reading

டிசம்பர்-24. சாதாரண பாப்கானுக்கு மூன்று வகையான வரியை இந்திய ஜி.எஸ்.டி. கவுன்சில் விதித்து இருப்பது நாடு முழுவதும் பெரும் விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. பாப்கானில் மசலா கலந்திருக்கலாம், ஆனால் அதற்கான கவரில் நிறுவனத்தின் பெயர், முத்திரை போன்றவற்றை போடாமல் இருந்தால் அதற்கு வரி 5% ஜி.எஸ்.டி. பாப்கானில் மசாலாவும் கலந்து அதற்கான கவரில் கம்பெனி பெயர் போடப்பட்டு இருந்தால் அதற்கு வரி 12% ஆகும். இன்னொரு வகையான கேரமல் பாப்கான்Continue Reading

டிசம்பர்-23, பள்ளிகளில் 5 மற்றும் 8- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி முறையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இறுதித் தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களுக்கு பின் மறுதேர்வு நடத்தப்படும். இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாவிட்டால் அடுத்த வகுப்புக்கு அனுப்பக் கூடாது என்ற மத்திய கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது. *Continue Reading

டிசம்பர்-23. அரசு ஊழியரின் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த விவரங்கள், தனிப்பட்ட விவரங்கள் அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட நீர்வளத்துறை உதவிப் பொறியாளர் காளிப்பிரியனின் சொத்து விபரங்களை பெறுவதற்கு தகவல் பெறும் சட்டத்தின் கீழ் அனுப்பபப்பட்ட விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கு எதிரான வழக்கில் இந்த கருத்தை உயர்நீதிமன்றம் வெளியிட்டு இருக்கிறது. அடுத்த 2 மாதங்களில் இதனைப் பரிசீலித்து முடித்துவைக்குமாறு மாநில தகவல் ஆணையத்திற்கு நீதிபதி கார்த்திகேயன்Continue Reading

டிசம்பர்-23. தமிழ் நாட்டின் முக்கிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்று வானிலை மையம் அறிவுறுத்தி உள்ளது.. மத்திய மேற்கு வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவும் நிலையில் 7 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வேண்டும் வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டு உள்ளது. சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய ஏழு துறை முகங்களுக்கும் இந்த வேண்டுகோள் அனுப்பப்பட்டுContinue Reading