நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக் கைதிகள் துன்புறுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தும் ஐஏஎஸ் அதிகாரி அமுதா முன்னிலையில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று முதல் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்கலாம் என நெல்லை ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அம்பாசமுத்திரம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஐஏஎஸ் அதிகாரி அமுதா தலைமையில், திங்கள்கிழமை முதல் விசாரணை நடைபெறும். ஐபிஎஸ் அதிகாரி பல்வீர் சிங்-ஆல் பாதிக்கப்பட்டவர்கள் தங்களிடம் உள்ள ஆவணங்கள்,Continue Reading

ராகுல்காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதைக் கண்டித்து நெல்லையில் வரும் 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டம் கொக்கிரகுளத்தில் உள்ள மாநகர் மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாராளுமன்றத்தில் அதானி குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதனால் அதானிக்கும், பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பைContinue Reading

நெல்லையில் மெகா தூய்மைப் பணித் திட்டத்தின்கீழ், மாநகராட்சிப் பகுதிகளில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டர்களை மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ அமைப்பினர் உள்ளிட்டோர் அகற்றினர். சுத்தமான பசுமையான மற்றும் நீடித்த சுற்றுச்சூழலை உறுதிசெய்யும் வகையில் நகராட்சிகளின் நிர்வாக இயக்குனர் பொன்னையா மற்றும் நெல்லை மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உத்தரவின் பேரில் பெருமளவிலான மக்கள் பங்கேற்புடன், ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தீவிர தூய்மைப் பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டுContinue Reading

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தில், மாவட்ட எஸ்.பி.சரவணனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உள்துறை செயலாளர் பனீந்தர் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். நெல்லை மாவட்டம் அம்பை, கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையங்களில் விசாரணைக்கு வந்தவர்களின் பற்களை பிடுங்கியதாக உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர் சிங் மற்றும் சில போலீசார் மீது புகார் எழுந்தது. இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் சஸ்பெண்டுContinue Reading

அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்துவரப்பட்ட கைதிகளின் பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம் தொடர்பாக இன்று ஆஜராக ஏ.எஸ்.பி. பல்வீர் சிங்கிற்கு மாநில மனித உரிமை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களின் பற்களை பிடுங்கியதாக வந்த புகாரின்பேரில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டு பின் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இதுதொடர்பாக சேரன்மாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை பாதிக்கப்பட்டContinue Reading

திருநெல்வேலி அருகே ரயிலில் அடிபட்டு தந்தையும், 5வயது மகனும் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். திருநெல்வேலி மாவட்டம் மேலமுன்னீர்பள்ளம் அன்னைநகர் பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நேற்று இரவு 2 பேர் இறந்து கிடந்தனர். இதைப்பார்த்த அந்த வழியாக சென்ற மக்கள், முன்னீர்பள்ளம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பார்த்தபோது, ஒரு வாலிபரும், ஒரு குழந்தையும் பிணமாக கிடந்ததை கண்டனர்.Continue Reading