கோவை மாவட்டம் வால்பாறை அருகே அதிரப்பள்ளி வன பகுதிக்குள் சுற்றத்திரிந்த தும்பிக்கை இல்லாத யானைக்குட்டி, நீண்ட நாட்களுக்குப் பிறகு யானைக் கூட்டத்துடன் சேர்ந்தது. இது தொடர்பாக கேரள வனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள் வைரலாகி வருகிறது. திருச்சூர் மாவட்டம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் சில மாதங்களுக்கு முன்பு தும்பிக்கை இல்லாமல் குட்டியானை ஒன்று சுற்றுலா பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், குட்டி யானையை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.Continue Reading

சென்னை கலாஷேத்ரா கல்லூரியில் பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், அது தொடர்பாக மாணவிகளிடம் மாநில மனித உரிமை ஆணையம் இன்று விசாரணை நடத்திவருகிறது. மத்திய அரசின் கலாசாரத் துறையின் கீழ் உள்ள கலாஷேத்ரா நிறுவனம் நடத்தி வரும் ருக்மணி தேவி கவின் கலைக் கல்லூரி சென்னை திருவான்மியூரில் செயல்பட்டுவருகிறது. இங்கு பணியாற்றும் 4 ஊழியர்கள், பாலியல் தொல்லை தருவதாக குற்றம்சாட்டிய மாணவிகள், கடந்த 2 வாரங்களுக்கு முன்புContinue Reading

கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, பாட்டில்கள் திரும்ப பெறப்படும் என டாஸ்மாக் நிறுவனம் அறிவித்த நிலையில், ஒரு வாரத்தில் 26 லட்சத்திற்கும் மேற்பட்ட காலி பாட்டில்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் ஏப்ரல் 1ஆம் தேதியிலிருந்து காலி மதுபாட்டில்களை சாலையோரங்களில் வீசி செல்வதை தடுக்கும் பொருட்டு, டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு மதுபான பாட்டில்களிலும்,Continue Reading

கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெறும் “எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை” புகைப்பட கண்காட்சியை நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி பார்வையிட்டனர். கோவை வ.உ.சி மைதானத்தில் நடைபெற்று வரும் “எங்கள் முதல்வர்-எங்கள் பெருமை” கண்காட்சியை கடந்த 7ஆம் தேதி நடிகர் சத்யராஜ் தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து, திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் என பலதரப்பட்டவர்களும் இந்தக் கண்காட்சியைப் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலெட்சுமி தம்பதி, இன்று புகைப்பட கண்காட்சியைContinue Reading

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் பால் கொள்முதல் விலை உயர்த்தப்படாததைக் கண்டித்து நூதன போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் உடுமலையில் நாள் முழுவதும் பசுவிடமிருந்து பாலைக் கறக்காமல் கன்றுக்கு மட்டும் கொடுத்து நூதன போராட்டத்தை நடத்த விவசாயிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதுகுறித்து பேசிய விவசாயிகள், விவசாயம் சார்ந்த உபதொழிலாக கால்நடை வளர்ப்பு உள்ளது. விவசாயத்தில் போதிய வருமானம் கிடைக்காத போது கால்நடை வளர்ப்பு கைகொடுக்கும். ஆனால், சமீபContinue Reading