மே.1 தமிழகத்தில் வேலூர் உள்பட 4 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக ‘ஆரஞ்சு அலர்ட்’ விடுத்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. தமிழகத்தில் கோடை வெயில் வாட்டியெடுத்து வரும் நிலையில், கடந்த சில நாட்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்துவருகிறது. இதன் தொடர்ச்சியாக, தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும்Continue Reading

ஏப்ரல்.29 தமிழகத்தில் உள்ள வணிகவளாக மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் தானியங்கி மதுபான விற்பனை இயந்திரம் (ஏடிஎம்) மூலம் மது விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தினால் 101 இடங்களில் வணிக வளாக மதுபான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டுவருகிறது. இந்த விற்பனைக் கடைகளில் விற்பனை விலையைவிட கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக பெறப்படும் புகார்களைContinue Reading

ஏப்ரல்.29 சினிமாவுக்கு வந்த புதிதில் வில்லனாக நடிக்கவே ஆசைப்பட்டேன் என்று என்.டி.ராமராவ் நூற்றாண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். மறைந்த நடிகரும் முன்னாள் ஆந்திர முதலமைச்சருகமான என்.டி.ராமராவின் நூற்றாண்டு ஜெயந்தி விழா விஜயவாடா போரங்கி அனுமோலு கார்டனில் நடைபெற்றது. இந்த விழாவில் சந்திரபாபு நாயுடு, நடிகர் பாலகிருஷ்ணா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ”உங்கள் அனைவரையும் பார்க்கும்போதுContinue Reading

ஏப்ரல்.29 மே. 1ம் தேதி உழைப்பாளர் தின விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் 3 நாள் தொடர் விடுமுறை என்பதல், கோவையிலிருந்து வெளியூர் செல்ல சுமார் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். தொடர் விடுமுறையையொட்டி, இன்று முதல் 4 நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு தேர்வுகள் முடிவடைந்து நிலையில், கோடை விடுமுறை நாளை முதல் தொடங்குகிறது.Continue Reading

ஏப்ரல்.28 தமிழகத்தில் அங்கீகாரம் பெற்ற தேசிய கட்சிகள் பட்டியலில் இருந்து இரண்டு கட்சிகள் நீக்கப்பட்டதோடு, புதிதாக ஒரு கட்சி சேர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாஜக., காங்கிரஸ், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ் ஆகியவை தேசிய கட்சிகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அதேபோல், தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் மாநிலக் கட்சிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பட்டியலில் இடம்பிடித்துள்ள இந்தக் கட்சிகளுக்கு மட்டுமே, தேர்தல் கமிஷன் நடத்தும் கூட்டங்களுக்குContinue Reading

ஏப்ரல்.27 தமிழகத்தில், திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய செவிலியர் கல்லூரிகள் தொடங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் செவிலியர் பணியை வலுப்படுத்தும் வகையில், கடந்த 2014-ம் ஆண்டு முதல் உருவாக்கப்பட்ட மருத்துவ கல்லூரிகளுக்கு அருகிலேயே ரூ.1570 கோடி செலவில் 157 புதிய செவிலியர் கல்லூரிகளை ஏற்படுத்துவதற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், ஆண்டுதோறும் கூடுதலாகContinue Reading

ஏப்ரல்.26 கோவை ஈஷா யோகா மையம்‌ சார்பில்‌ ஒரே மாதத்தில்‌ சிறைகளில்‌ உள்ள 2,000க்கும்‌ மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுத்தரப்பட்டுள்ளது. தமிழக சிறைகளில்‌ இருக்கும்‌ கைதிகள்‌ குடும்பத்தினரை பிரிந்து தனிமையில்‌ வாழ்வதால்,‌ மனஅழுத்தம்‌, உடல்‌ நல‌ப்பாதிப்பு போன்ற பிரச்சினைகளை எதிர் கொண்டு வருகின்றனர்‌. இந்த பிரச்சினைகளில்‌ இருந்து அவர்கள்‌ வெளிவர உதவும்‌ விதமாக அவர்களுக்கு சிறப்பு யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம் சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நடப்புContinue Reading

ஏப்ரல்.26 தமிழகத்தில் மே முதல் ஜூன் வரை அறுவடையாகும் சின்ன வெங்காயம் கிலோ 32 ரூபாய் வரை விற்பனையாகும் என வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில், வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கிவரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டுத் திட்டத்தின் விலை முன்னறிவிப்பை உருவாக்கியுள்ளது. உலகளவில் மிகுதியாக வெங்காய உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம்Continue Reading

ஏப்ரல்.25 தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கடந்த சில வாரங்களாக கோடை வெயில் மக்களை கடுமையாக வாட்டி எடுத்து வருகிறது. இதனால், மக்கள் வீட்டை விட்டு வெளியே செல்லவே பயப்படும் சூழல் இருந்துவருகிறது. இந்த நிலையில் கோடை வெயிலை தணிக்கும் வகையில், தமிழகத்தின் பல மாவட்டங்களில் அவ்வப்போதுContinue Reading

ஏப்ரல்.24 தமிழகம் முழுவதும் ஜி-ஸ்கொயர் நிறுவனம் தொடர்புடைய அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்திவருகின்றனர். கோவை,சென்னை உட்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்டு திருச்சி, கோயம்புத்தூர் மற்றும் பெங்களூர், ஹைதரபாத் ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் ரியல் எஸ்டேட் நிறுவனம் ஜி ஸ்கொயர் குரூப்ஸ். குறிப்பாக இந்த நிறுவனம் நிலங்களை வாங்கி குடியிருப்புகளாக கட்டி விற்பனை செய்வதையும், நிலங்களாகவும் விற்பனை செய்வதையும்Continue Reading