ஜூலை, 13- சென்னையில் திருட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்கு காவல் நிலையம் சென்று விட்டு வீடு திரும்பிய 24 வயது இளைஞர் உயிர் இழந்தது சர்ச்சைகளை ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை எம்.ஜி.ஆர் நகர் நல்லான் பிள்ளை தெருவைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரை எம்ஜிஆர் நகர் போலீசார், வீடு ஒன்றில் இருந்து நகை காணமல் போனது தொடர்பாக புதன்கிழமை அன்று அழைத்துச் சென்று விசாரணை செய்துள்ளனர். பிறகு ஶ்ரீதரை இன்று (Continue Reading

நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சித்தாந்தங்கள் உண்டு. ஆசைகளும் இலக்குகளும் வெவ்வேறானவை. ஆனால், மூன்றாம் முறையாக பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்து விடக்கூடாது  என்பதில் அவர்களிடையே கருத்து பேதம் இல்லை. இந்த ஒற்றைப்புள்ளியை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாவே மும்முரமாக இறங்கினார். இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அவர் ஏற்பாட்டில் நடந்தContinue Reading

பிரமாண்ட படங்களின் பிதாமகனான இயக்குநர் ஷங்கர்,ஆரம்பத்தில் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் உதவியாளராக பணியாற்றியவர். எஸ்.ஏ.சி.யின் மகன் விஜயை வைத்து அவர் ஜீன்ஸ் படத்தை  இயக்குவதாக இருந்தார். இந்தப்படத்துக்காக ஷங்கர் கேட்ட தேதிகள் மலைக்க வைப்பதாக இருந்ததால் விஜய், அதில் நடிக்கவில்லை. இந்திப்படமான ’த்ரி இடியட்ஸ்’ தமிழில் ரீ-மேக் செய்யப்பட்டபோது  ஷங்கருடன் விஜய் இணையும் வாய்ப்பு உருவானது. ‘நண்பன் ‘ என்ற பெயரில் தயாரான அந்தப் டம் பெரிய வெற்றி அடைந்தாலும் மீண்டும்  ஷங்கர்-விஜய்Continue Reading

அண்ணாத்த படத்தை அடுத்து சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார்.அடுத்த மாதம் வெளியாகும் இந்த படத்தில் இடம் பெறும் ‘காவலா’ பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது வெளியான சில நாட்களில் இரண்டு கோடிக்கும் அதிகமான  பார்வையாளர்கள், இந்தப்பாடலை யூடியூப்பில் பார்த்துள்ளனர். ஜெயிலர் படத்தை முடித்த கையோடு ஓய்வு ஏதும் எடுக்காமல் ’லால் சலாம்’ படத்தின் ஷுட்டிங்கில் ரஜினிகாந்த் பங்கேற்றார். ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாContinue Reading

ஜுலை,12- தனியார் தொலைக்காட்சிகளில் புதிய சினிமாக்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டபோது, தமிழக  திரையரங்கு உரிமையாளர்கள் போர்க்குரல் எழுப்பினர். ‘தியேட்டர்களில் படங்கள் வெளியாகி , 6 மாதங்கள் கழித்தே டிவிக்களில் ஒளிபரப்ப வேண்டும்’ என கெடு வைத்தனர். இந்த கோரிக்கையை, சில தயாரிப்பாளர்களே ஏற்கவில்லை. தியேட்டரில் வெளியாகி ஓடாத படங்களை நல்ல விலைக்கு தனியார் தொலைக்காட்சிகளுக்கு தயாரிப்பாளர்கள் விற்று காசு பார்த்தனர். ஒடாத அந்த படங்கள் சில நாட்களிலேயே டிவிக்களில் ஒளிபரப்பானது. தியேட்டர்Continue Reading

ஜுலை,12- தேனி அல்லிநகரத்தில் இருந்து சினிமா கனவில் சென்னை நகருக்கு வந்த பாரதிராஜாவை அடையாளம் கண்டு, அவரை இயக்குநர் ஆக்கியவர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. தனது அம்மன் கிரியேஷன்ஸ் நிறுவனம் மூலம் ராஜ்கண்ணு தயாரித்த 16 வயதினிலே படம், தமிழ் சினிமாவில் புதிய அலையை உருவாக்கியது. கனவு தொழிற்சாலைக்குள்  நட்சத்திரங்கள், இயக்குநர்கள் போன்ற புதிய வரவுகளுக்கு பாதை போட்டது ராஜ்கண்ணுவின் அந்தப்படம் தான். 1977 ஆம் ஆண்டு வெளியான இந்தப்படம் கமல்ஹாசன், ரஜினிகாந்த்,Continue Reading

சேலம் மாவட்ட தொழில் முனைவோரை கடந்த ஒருவாரமாக பெண் ஒருவர் உலுக்கிக் கொண்டிருக்கிறார். அடையாளம் தெரியாத அந்த பெண்ணிடம் இருந்து எடப்பாடியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு மூன்று நாட்களுக்கு முன் ஆபாசப் படங்கள் வந்ததுதான் பிரச்சினையின் ஆரம்பம். படஙகளைப் பார்த்து அதிர்ந்துப் போன அவர், அதனை அழித்துவிட்டு மற்ற நண்பர்களிடம் தகவலை தெரிவித்தார். அவர்களும் தங்களின் செல்போன் வாட்ஸ் அப் க்கு ஆபாசப் படங்களை பெண் ஒருவர் அனுப்பி உள்ளார்Continue Reading

தமிழில் ஷங்கர் போல், தெலுங்கில் பிரமாண்ட  சினிமாக்களை கொடுக்கும் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி. அவர் இயக்கிய பாகுபலி இரண்டு பாகங்களும் பெரும் வெற்றி பெற்றன. இந்தியாவை தாண்டி ராஜமவுலியை அந்த படங்கள் அடையாளம் காட்டின. இதனை தொடர்ந்து ராஜமவுலி இயக்கிய மற்றொரு பிரமாண்ட படைப்பு ஆர்.ஆர்.ஆர். ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்,அஜய்தேவ்கன்,அலியாபட், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடித்த இந்தப்படம் உலக அளவில் பேசப்பட்டது.1300 கோடி ரூபாய் வசூலித்து புதிய சாதனையை படைத்தது. ஆர்ஆர்ஆர்.Continue Reading

எடப்பாடி பழனிசாமி தலைமையில் இருப்பதுதான் அதிமுக என்பதை தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்றும் இதோ போன்று அந்தக் கட்சியின் தலைமை நிர்வாகிகள் பெயரும் பதியப்பட்டு இருக்கிறது.  இதனால் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இனி அதிமுக என்று அதிகாரப்பூர்வமாக சொல்லிக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளின் அடிப்படையில் தேர்தல்Continue Reading

சொகுசாக உட்கார்ந்துகொண்டு வன்மங்களை விதைப்பவர்களால் அப்பாவிகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டம் ஒழுங்கு தொடர்பாக சென்னையில் காவல்துறை அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை இல்லை என்று கூறிய அவர் சட்டம் ஒழுங்கிற்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக திகழ்கிறது என்றார்.நிம்மதியாக உள்ள நாட்டில் தான் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முடியும் என்றும் முதலமைச்சசர் கூறியுள்ளார். மேலும் அவர் கூறியதாவது..Continue Reading