ஜுலை, 25- சென்னையில் பிரபல டெக்ஸ்டைல் உரிமையாளரின் கார் மோதி 60 வயது முதியவர் இறந்த சிசிடிவி காட்சிகள் வைரலாகி உள்ளது. கே.கே நகரை சேர்ந்த ரவிவர்மா என்பவர் இரு சக்கர வாகனம் ஒன்றில் தியாகராயர் நகரில் உஸ்மான் சாலை மேம்பாலம் வழியாக கடைக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த சொகுசு கார் ஒன்று ரவிவர்மா ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் பின்புறமாக மோதியது.   இதில் தூக்கிContinue Reading

ஜுலை,25- எதிர்க்கட்சிகள் கூட்டணியான இந்தியாவை பிரதமர் நரேந்திர மோடி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.  “இந்தியன் முஜாஹிதீன்”, “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” போன்ற அமைப்புகளின் பெயரில் கூட இந்தியா என்ற பெயர் இருக்கிறது. அதனால் பெயரால் ஒன்றும் நடந்து விடப் போவதில்லை என்று மோடி தெரிவித்து இருக்கிறார். பாரதீய ஜனதா கட்சி  எம்.பி.க்கள் கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் பேசிய மோடி.”இதுபோன்ற திசையற்ற எதிர்க்கட்சியை நான் பார்த்ததில்லை”Continue Reading

முன்னொரு காலத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தமிழில் ஐந்தாறு சினிமாக்கள் வெளியாகும். நாளடைவில், அந்த எண்ணிக்கை குறைந்திருந்தது.கொரோனா காலகட்டத்தில், தியேட்டர்கள் மூடப்பட்டு, சினிமா தொழிலே முடங்கியது. கொரோனா காலம் முடிவுக்கு வந்தபின் தமிழ் சினிமா மீண்டும் புத்துணர்ச்சி பெற்றுள்ளது. முன்பு போல் அதிக படங்கள் தயாராகின்றன. ரிலீஸ் ஆகின்றன. அடுத்த  மாதல் ஜெயிலர் வர உள்ளது. அதற்கடுத்த மாதங்களிலும் பெரிய படங்கள் ரிலீஸ் ஆகிறது அதனால், சிறிய பட்ஜெட் படங்களின் தயாரிப்பாளர்கள்Continue Reading

ஜுலை,25- மும்பை குண்டு வெடிப்பு,குஜராத் கலவரம் போன்ற பயங்கரவாத செயல்களுடன்  தொடர்பு உள்ள தவ்ஃபிக் என்பவரை சென்னை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். கடந்த பல ஆண்டுகளாக வெளிநாட்டில் இருந்த இவர் சென்னை வந்த காரணம், போலிசாருக்கு பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது. சென்னை மண்ணடியை சேர்ந்த தொழிலதிபர் அக்பர் என்பவர், ஹவாலா பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதை தவ்பிக் தெரிந்து வைத்துக்கொண்டு, என்.ஐ.ஏ அதிகாரி போல் நடித்து கடந்த 2020Continue Reading

ஜுலை, 24- தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.. பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை.தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி. தருமபுரியில் விதைத்தால், அதுContinue Reading

ஜுலை, 24- முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகன் குமாரசாமி. தந்தைக்கு வயதாகி விட்டதால், அவர்கள் குடும்பக்கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தை குமாரசாமிதான் பராமரித்து வருகிறார்.  சோனியாவுக்கும் ராகுலுக்கும் கிடைக்காத வாய்ப்பு தேவகவுடாவுக்கு கிடைத்தது. கடந்த 1996- ல் 20 சொச்சம் எம்.பி.க்களை வைத்துக்கொண்டு பிரதமர் நாற்காலியில் அமர்ந்தார், தேவகவுடா. மகனுக்கும் அதே ராசி போலும். 30 பிளஸ் எம்.எல்.ஏ.க்களை வைத்திருந்த குமாரசாமி இரண்டு முறை கர்நாடக முதல் அமைச்சராக பதவிContinue Reading

மிழ்நாட்டில் கடந்த சட்டசபைத்தேர்தலின் போது திமுக பல வாக்குறுதிகளை அளித்தது. இதில் முக்கியமானது, குடும்பத்தலைவிகளுக்கு உதவும் வகையில் மாதம்தோறும் 1000 ரூபாய் வழங்கப்படும் என்றஅறிவிப்பு. தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பேற்றதும் உடனடியாக , பெண்கள் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற இயலவில்லை. நிதி நெருக்கடியே அதற்கான காரணம். இதனை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ஒரு படியாக, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் அண்ணா பிறந்த நாளானசெப்டம்பர் 15–ம்Continue Reading

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தை சேர்ந்த கும்பல் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக இழுத்துச் சென்றது. அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.தடுக்க முயன்ற குகி சமூக இளைஞர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில்,இம்பாலில் மேலும் இரண்டு பழங்குடியின பெண்கள் கும்பல் ஒன்றால்Continue Reading

காதல் மன்னன் என வர்ணிக்கப்படும் நடிகர் ஜெமினி கணேசனின் வாரிசுதான்,இந்தி நடிகை ரேகா. ஜெமினிக்கும், தெலுங்கு நடிகை புஷ்பவள்ளிக்கும் மகளாக 1954 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தார். 15 வயதிலேயே கலைச்சேவை செய்ய ஆரம்பித்தார். பாலிவுட்டின் மிக அழகான நடிகைகளில் பட்டியலில் ரேகாவின் பெயர் முதலிடத்தில் உள்ளது. வடக்கில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமிதாப் பச்சன், ராஜ் பப்பார், வினோத் மெஹ்ரா, கிரண் குமார், சத்ருகன் சின்ஹா, சாஜித்Continue Reading

ஜுலை,23- தமிழ் நாட்டில் 24 இடங்களில் என்.ஐ.ஏ. எனப்படும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்  சோதனை மேற்கொண்டு உள்ளனர். கும்பகோணம் அடுத்து உள்ள திருபுவனத்தில் கடந்த 2019 ஆண்டு ராமலிங்கம் என்ற சமையல் ஒப்பந்ததாரர் வெட்டிக் கொல்லப்பட்டார். மத மாற்றத்திற்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டவர்களை தட்டிக் கேட்டதால் வாய்த் தகறாறு ஏற்பட்டு இருக்கிறது. இதனால் அங்கிருந்து சென்றவர்கள் பிறகு ராமலிங்கத்தை வெட்டிக் கொன்று விட்டனர். இந்த வழக்கில் மொத்தம் 12 பேர் Continue Reading