அரசியலில் இதெல்லாம் சகஜம்பா என்று கவுண்டமணி பேசும் வசனம் அடிக்கடி மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது. மராட்டியத்தில் தேசிய வாத காங்கிரசில் இருந்து கடந்த வாரம் சுமார் 30 எம்.எல்.ஏ.க்களுடன் வெளியேறி பாரதீய ஜனதா கூட்டணியில் சேர்ந்து முதலைமச்சர்பதவியை பெற்றவர் அஜித்பவார். இவர் சரத் பாவரின் அண்ணன் மகன் ஆவார். கட்சியில் இரண்டவாது இடத்தில் இருந்தவர். திடீரென சரத்பவார் தமது மகள் சுப்ரியாவை முன்னிலைப்படுத்தி கட்சியில் செயல் தலைவர் பதவி கொடுத்தது தம்மைContinue Reading

தமிழ்நாட்டில் உள்ள 4,829 டாஸ்மாக் கடைகள் மூலம் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 130 கோடி ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. தீபாவளி போன்ற பண்டிகை தினங்களில் 200 கோடி ரூபாயை தாண்டும். அனைத்து நாட்களிலும் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படுகிறது. திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், வள்ளலார் தினம் உள்ளிட்ட 8 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை. அண்டை மாநிலமானContinue Reading

மதுரையில் ரூ.206 கோடி மதிப்பில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். பள்ளிப்பருவத்தில் எழுதContinue Reading

நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் இணைந்த முதல் படமான ‘மாஸ்டர்’ வசூலை வாரி இறைத்தது. இந்த ஜோடி மீண்டும் ‘லியோ’ படத்துக்காக ஒன்றிணைந்தது. லலித் குமார் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார்.அர்ஜுன், சஞ்சய் தத்,, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாகContinue Reading

ஜுலை, 14- சந்திராயன்- 3  விண்கலத்தை வெற்றிகரமாக விண்ணில் ஏவி இந்திய விஞ்ஞானிகள் சாதனை செய்து உள்ளனர். இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 2.35 மணிக்கு எல்.வி.எம்.-3 எம்- 4 எனப்படும் ராக்கெட் சந்திராயன்-  3 விண்கலத்தை சுமந்துகொண்டு விண்ணுக்குச் சென்றது. இதையடுத்து அதை குறிப்பிட்ட நீள வட்டப் பாதையில் நிலை நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டனர். சந்திராயன்- 3 ஏவப்படுவதற்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில்Continue Reading

பருவமழையால் டெல்லி, இமாச்சலபிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 6 மாநிலங்கள் நிலைகுலைந்து போயுள்ளன. இமாச்சலபிரதேசத்தில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவினால் ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன.42 பேர் இறந்து போனார்கள். டெல்லியில் வெளுத்து வாங்கிய மழையால் தலைநகரம் வெள்ளத்தில் மிதக்கிறது.கடந்த 45 ஆண்டுகளுக்குப்பின் யமுனை ஆற்று நீரின் அளவு 208 மீட்டரை தாண்டியுள்ளது. முதல்-அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளது.உச்ச நீதிமன்றம் போன்ற முக்கிய இடங்களுக்குச் செல்லும் சாலைகளும்Continue Reading

ஜுலை, 13- முன்னாள் முதல்-அமைச்சர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா பல்வேறு அடுக்குகளாக தமிழகத்தில் நடத்தப்படுகிறது. தமிழக அரசு, தி.மு.க.மற்றும் கலைஞர் மீது பற்றுள்ள தன்னார்வலர்கள் என பல தரப்பினர் பல விதங்களில் கலைஞரை கொண்டாடுகிறார்கள். கருணாநிதி,புத்தகங்களின் காதலர். அவரது ஆழமான வாசிப்பும், படைப்பாற்றலும் தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். பள்ளிப்பருவத்தில் எழுத ஆரம்பித்தவர், 94 வயது வரை எழுதிக்கொண்டே இருந்தார்.அவர் தொடாத துறைகளே இல்லை.’எழுத்தாளர்’கருணாநிதிக்கு பெருமை சேர்க்கும் வகையில்Continue Reading

நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சித்தாந்தங்கள் உண்டு. ஆசைகளும் இலக்குகளும் வெவ்வேறானவை. ஆனால், மூன்றாம் முறையாக பிரதமர் நாற்காலியில் மோடி அமர்ந்து விடக்கூடாது  என்பதில் அவர்களிடையே கருத்து பேதம் இல்லை. இந்த ஒற்றைப்புள்ளியை மையமாக வைத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகளில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், கடந்த சில மாதங்களாவே மும்முரமாக இறங்கினார். இதற்கு ஓரளவு பலன் கிடைத்தது.பாட்னாவில் கடந்த மாதம் 23 ஆம் தேதி அவர் ஏற்பாட்டில் நடந்தContinue Reading

கோவையில் ஓட்டல் ஒன்றில் செல்வபுரத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் – ஹேமலதா திருமண வரவேற்பு நடைபெற்றது. உறவினர்கள் , நண்பர்கள் என ஏராளமானவர்கள பரிசளித்து வாழ்த்தினர். இதே போன்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் கோவை மாவட்ட குழு தலைவர் சு. பழனிச்சாமி உள்ளிட்ட விவசாயிகள் குழுவாக வந்து புதுமண தம்பதிகளை வாழ்த்த வந்திருந்தனர். மற்றவர்கள் தங்கம், வெள்ளி அல்லது வேறு வகையான பரிசுகளை, பணத்தை மணமக்களுக்கு தந்து வாழ்த்தி மகிழ்ந்தார்கள். ஆனால்Continue Reading

ஜுலை, 10- அருவிகள் ஆர்ப்பரிக்கும் குற்றாலத்தில் இப்போது உச்சக்கட்ட சீசன். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் வெளுத்து வாங்கும் மழையால் அனைத்து அருவிகளிலும் நீர் கொட்டுகிறது. நேற்று விடுமுறை தினம் என்பதால், சுற்றுலாப்பயணிகள் ஆயிரக்கணக்கில் வந்திறங்கினர். இதமான சாரலின் அரவணைப்பில் அவர்கள் குளிர்ந்து போனார்கள். பேரிறைச்சலோடு மூலிகை தண்ணீர் பொழிந்த பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளில் கூட்டம் அலை மோதியது.குடும்பம் ,குடும்பமாக வந்திருந்த பயணிகள் ஆசை தீர குளித்து மகிழ்ந்தனர்.Continue Reading