ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் நடிகை குஷ்பு குறித்து தரக்குறைவாக விமர்சித்துப் பேசிய திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ண மூர்த்தியை சென்னை கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். சென்னை வடக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் இரு தினங்கள் முன்பு நடைபெற்றது. இதில் பங்கேற்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என்ற திமுக  மேடைப் பேச்சாளர், ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகContinue Reading

ராமநாதபுரத்தில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் நவாஸ் கனி எம்.பி. இருவரும் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சி வளைதளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழே தள்ளிவிட்ட நவாஸ் கனி எம்.பி-யின் உதவியாளர் விஜயராமு மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் தினேஷ்குமார் அளித்த புகாரில் அடிப்படையில் போலீசார் இந்தContinue Reading

தமிழக அரசால் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகளில் மது குடிப்பவர்கள் ஏதோ ஒரு காரணத்தால் இறந்துவிடுவது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திவிடுகிறது. திருச்சி மாவட்டத்தில் லால்குடி அருகே தச்சன்குறிச்சியில் மது குடித்த இருவர் உயிரிழந்ததாக வந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற திருச்சி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் உடலை கைப்பற்றி விசாரணை நடத்த உத்தரவிட்டு உள்ளார். தச்சங்குறிச்சி 4 – வது வார்டு உறுப்பினர் முனியாண்டி (55), கூலித்Continue Reading

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கைது செய்யப்ட்ட பாஜக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநிலச செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை ஜூலை 1ஆம் தேதி வரை 15 நாட்களுக்கு சிறையில் அடைக்குமாறு மதுரை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் குறித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குறித்தும் கடந்த 7-ஆம் தேதி தனது ட்விட்டர் பக்கத்தில் அவதூறான கருத்துக்களை வெளியிட்டார் என்பது சூர்யாContinue Reading

கோவை மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை முற்றிலும் வறண்டு போய் இருப்பதால் கோவை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கோவை மாவட்டத்தில் உள்ள சிறுவாணி அணைக்கட்டு, மாநகருக்கான குடிநீர் ஆதாரமாக உள்ளது. 50 அடி உயரம் கொண்ட இந்த அணையில், 45 அடிகள் வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியும். சிறுவாணி அணைக்கட்டு பகுதியில் கோவை கூட்டுகுடிநீர் திட்டத்தின்கீழ் உறைகிணறு அமைக்கப்பட்டு உள்ளது. அங்குContinue Reading

  June 13, 23 மயிலாடுதுறையில் இரண்டு பேர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம், டாஸ்மாக் மதுபானத்தை அருந்தியதாக உறவினர்கள் குற்றச்சாட்டு, இரண்டு மது பாட்டில்களை உளவுத்துறை காவல்துறையினரிடம் அளித்ததாகவும் அதை அவர்கள் பெற்று சென்றதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் பேட்டி அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரக்கத்திற்கு உட்பட்ட தத்தங்குடியைச் சேர்ந்த பூராசாமி மற்றும் பழனி குருநாதன் ஆகிய இருவரும் அங்குள்ள கொள்ளு பட்டறையில் இன்று மர்மமானContinue Reading

மருத்துவ படிப்புகளுக்கு இந்திய அளவில் பொது கலந்தாய்வு நடத்தினால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுவர்; பொது கலந்தாய்வை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்புரமணியன் தெரிவித்து உள்ளார் சென்தி்னையில் பேட்டியளித்த அவர்,  மத்திய அரசின் புதிய நடவடிக்கையால்  மருத்துவ கல்வி இடங்களை அதிகம் வைத்துள்ள தமிழ்நாட்டுக்கு போதிய வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடும் என்றார். பொது கலந்தாய்வில் தமிழக மாணவர்களுக்கான முன்னுரிமை பறிபோகும்  என்றும்  மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.Continue Reading

திருவாரூர் மாவட்டம் கூத்தா நல்லுர் நகராட்சி ஆணையர் லஞ்சம் கேட்பதாக கூறி ஜேசிபி ஓட்டுநர் ஒருவர் டீசலை ஊற்றி தற்கொலை செய்து கொள்ள முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த செயலில் ஈடுபட்ட விஜயராகவன் என்பவரிடம் கூத்தாநல்லூர் நகராட்சி அலுவலர்கள் கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு பணிகளுக்காக ஜேசிபி வாகனத்தை வாடகைக்கு எடுத்துப் பயன்படுத்தி உள்ளார்கள். இதற்காக தமக்கு தரப்பட வேண்டிய  ஒரு லட்சத்து 9 ஆயிரம் ரூபாயை விஜயராகவன்Continue Reading

திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே மிளகாய் பொடி தூவி சுஷாந்த் என்ற நகை வியாபாரியிடம் ஒன்றரை கோடி ரூபாய் ரொக்கத்தை வழிப்பறி செய்த குற்றவாளிகளை கேரள மாநிலம் மூணாறில் வைத்து தமிழக போலீசார் கைது செய்து உள்ளனர். நெல்லை டவுனில் நகைக் கடை நடத்தி வரும் சுஷாந்த் தமது உதவியாளருடன் கடந்த 30 ம் தேதி அதிகாலை காரில் திருவனந்தபுரத்திற்கு நகை வாங்குவதற்காக புறப்பட்டார். அப்போது நாங்கு நேரி அருகேContinue Reading

ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் வீட்டின் மீது முதலீட்டாளர்கள் நள்ளிரவில் தாக்குதல் நடத்தினார்கள். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சயனபுரம் கிராமத்தில் இந்த தாக்குதல் நடந்து உள்ளது. இந்த ஊரில் வசிக்கும் ஆருத்ரா நிதி நிறுவன ஏஜென்ட் யோகானந்தம் வீட்டின் மீது நேற்றிரவு முதலீட்டாளர்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். நெமிலியில் ஒரு ஆண்டுக்கு முன்பு ஆருத்ரா நிதி நிறுவன கிளை அலுவலகம் துவக்கப்பட்து. இதில் ரூபாய் ஒரு லட்சம் கட்டினால்Continue Reading