ஆகஸ்டு,19- திடுக்கிடும் திருப்பங்கள் நிறைந்த மர்ம நாவல் போன்று, மகாராஷ்டிர மாநில அரசியலில் விதம் விதமான காட்சிகள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, சில ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அங்கிருந்து வெளியேறினார். காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆதரவை பெற்று முதலமைச்சர் ஆனார். அவரை கவிழ்க்க சிவசேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டேயுடன் பாஜக பேரம் பேசியது. பாஜக வலையில் அவர்Continue Reading

ஆகஸ்டு,17- திருப்பதி வெங்கடேச பெருமாளை தரிசிக்க மலைப்பாதை மார்க்கத்தில் ஏராளமான பக்தர்கள் செல்வது வழக்கம். இங்கு உலவும் சிறுத்தைகள் பக்தர்களை தாக்கும் நிகழ்வுகள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன.. மலைப்பாதையில் பெற்றோருடன் சாமி தரிதனம் செய்வதற்காக சென்ற 6 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் மக்கள் மத்தியில் பெரும் அச்சமும், பீதியும் ஏற்பட்டுள்ளது. சிறுமியை சிறுத்தை வேட்டையாடிய சம்பவத்தையடுத்து, மலைப்பாதையில் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு திருமலைContinue Reading

ஆகஸ்டு,16- தமிழ் சினிமாவில் கதாநாயகர்களின் பிம்பம் கட்டமைக்கப்படுவதற்கு, வில்லன் நடிகர்களே ஆதி முதல்ஆணி வேராக இருந்து வந்துள்ளனர்.எம்.ஜி.ஆருக்கு நம்பியார், ரஜினிக்கு ரகுவரன் என பொருத்தி,படத்தை வெற்றி அடையச்செய்தனர், இயக்குநர்கள்.வில்லன்களின் குரூர முகத்தை கிழித்து, நீதியை நிலைநாட்டியதால் சினிமா ஹீரோக்கள் நிஜமான நாயகன்களாக வலம் வந்தனர். பேட்ட, மாஸ்டர்,விக்ரம் ஆகிய படங்களின் வெற்றிக்கு வில்லன் விஜய்சேதுபதி .பெரும் காரணியாக இருந்தார். இதனால், நாயகனை முடிவு செய்யும் டைரக்டர்கள், யாரை வில்லனாக படத்துக்குள்Continue Reading

ஆகஸ்டு, 14- ‘அன்னக்கிளி’ படத்தில் வந்த தெங்குமராட்டா கிராமத்தில் வசிப்பவர்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு தேவையான நிதியை தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்திற்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த கிராமத்தில் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் நடக்கும் மோதல் அதிகரித்ததால், குத்தகைக்கு வழங்கப்பட்ட வனப்பகுதி நிலங்களை மீட்க வேண்டும் என்று தமிழக அரசின் முதன்மை தலைமை வனப் பாதுகாவலருக்கு, கோவைContinue Reading

தேர்தலில் பாஜகவை வீழ்த்த, பல மாதங்களுக்கு முன்பாகவே வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட்டவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்.இதன் தொடர்ச்சியாக பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் மேற்கொண்ட முயற்சிகளால்26 எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டு‘இந்தியா’எனும் வலிமையான கூட்டணியை கட்டமைத்துள்ளன. இந்த கூட்டணி அமைய பிள்ளையார் சுழி போட்ட சரத்பவார் கட்சியை உடைத்து நொறுக்க, உக்கிரத்துடன் செயல்பட்ட பாஜக, தனது முயற்சியில் வெற்றி கண்டது. சரத் அண்ணன் மகனும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமானContinue Reading

தமிழிலும், இந்தியிலும் கனவுக்கன்னியாக ஜொலித்த ஸ்ரீதேவிக்கு நேற்று ( ஞாயிறு) 60 –வது பிறந்தநாள். நான்கு வயதாக இருந்தபோது ’கந்தன் கருணை’ படத்தில்குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.கே.பாலசந்தர், தனது மூன்று முடிச்சு படத்தில் ஸ்ரீதேவியை கதாநாயகி ஆக்கினார்.  எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி,கமல் ஆகியோருடன் நடித்தவர் எனும் பெருமைக்கு சொந்தக்காரர். தமிழ் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியமொழிகளிலும் நடித்து, ரசிகர்கள் மத்தியில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். தென்னிந்திய மொழிகளில் சூப்பர்ஸ்டாரினியாக இருந்தContinue Reading

ஜெயிலர் படம் கடந்த வியாழக்கிழமைவெளியான நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒருவாரகால ஆன்மிக பயணமாக இமயமலைக்கு சென்றுள்ளார். அங்குள்ள  ரிஷிகேஷில் உள்ள தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு சென்ற ரஜினி சாமியார்களை சந்தித்தார். தயானந்த சரஸ்வதி சாமிகள் சிலைக்கு மாலை அணிவித்து பூஜை செய்தார். சாமியார்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தினார்.   இதனை தொடர்ந்து ரஜினி பத்ரிநாத் கோயிலுக்கு சென்றார். அவர் கோயிலுக்கு வந்த தகவல் அறிந்ததும் அவரைக்காணContinue Reading

—- நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியான ‘சூது கவ்வும்’ திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானவர் அசோக் செல்வன். இதனைத்தொடர்ந்து வெளியான ‘தெகிடி’ ‘ஓ மை கடவுளே’ ஆகிய படங்கள் மூலமாக கவனம் ஈர்த்தார். அண்மையில் வெளியான ‘போர் தொழில்’ அசோக் செல்வனுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.அந்தப்படம் மாஸ் ஹீரோவாக, அவரை மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்த்தது. இவரும், நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனும்Continue Reading

ஆகஸ்டு,09- மக்களவை உறுப்பினர் எனும் முறையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்திக்கு   டெல்லியில் உள்ள துக்ளக் சாலையில் 12-ம் எண் கொண்ட வீடு  ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இல்லத்தில் அவர் வசித்து வந்தார். கடந்த  மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது அவர், பிரதமர் மோடியை அதே பெயர் கொண்ட மற்ற சிலருடன் சேர்த்துப்  பேசியது  சர்ச்சையை ஏற்படுத்தியது. ’’மோடி சமூகத்தினரை ராகுல் அவமதித்துவிட்டார்’ என குற்றம் சாட்டி குஜராத் பாஜக எம்எல்ஏContinue Reading

ஆகஸ்டு,08- ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள்  2021 ஆம் ஆண்டு வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். தலிபான் என்றால் நவீனத்துவத்தின் எதிரி- பெண்களின் எதிரி என்று அர்த்தம். அதற்கு ஏற்பவே அவர்களின் செயல்பாடுகள் இன்றளவும் உள்ளன. ஆட்சிக்கு வந்த நேரத்தில், தாங்கள் ’’சைவ கொக்காக’’ மாறி விட்டதாக தலிபான்கள் பசப்பினர். ‘’ கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது-. பெண் கல்வி, பெண் சுதந்திரம் பேணப்படும்’’Continue Reading