ஜுலை, 24- தருமபுரி மாவட்டம் தொப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது.. பெண்களுக்கு வழங்கப்படும் மாதம் ரூ. 1,000 என்பது உதவித்தொகை அல்ல, உரிமைத்தொகை.தமிழ்நாட்டு மகளிர் தன்னம்பிக்கையோடும், சுயமரியாதையோடும் வாழ்வதற்காக கொண்டு வரப்பட்டதே கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் ஆகும். மகளிர் சுய உதவிக்குழு திட்டத்துக்கு விதை போட்ட மண் தான் தருமபுரி. தருமபுரியில் விதைத்தால், அதுContinue Reading

மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குகி பழங்குடியின பெண்கள் இருவரை மெய்தி சமூகத்தை சேர்ந்த கும்பல் ஆடைகளைக் களைந்து ஊர்வலமாக இழுத்துச் சென்றது. அவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.தடுக்க முயன்ற குகி சமூக இளைஞர் கொல்லப்பட்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது அந்த கோரச்சம்பவம் நிகழ்ந்த அதே நாளில்,இம்பாலில் மேலும் இரண்டு பழங்குடியின பெண்கள் கும்பல் ஒன்றால்Continue Reading

ஜுலை, 23- தமிழ் சினிமா உலகில் கமல்ஹாசன் உச்சத்தில் இருந்தபோது,மதுரையில் இருந்து வெள்ளித்திரையில் தலை காட்டுவதற்காக கோடம்பாக்கம் வந்தவர் விஜய்காந்த். சினிமாவில் நடிக்கத் தொடங்கி,படிப்படியாக முன்னேறி, பல இயக்குநர்கள் செதுக்கிய பின் உயர்ந்த இடத்துக்கு வந்த விஜயகாந்த், திடீர் என கட்சி ஆரம்பித்து  தலைவர் ஆகிவிட்டார்.தனியாக நின்று எம்.எல்.ஏ.தேர்தலிலும் ஜெயித்தார். அப்போதெல்லாம் கமல் நேரடியாக அரசியல் பேசவில்லை.அவர்,  தமிழக அரசியல் ஆளுமைகளான கலைஞரும்,ஜெயலலிதாவும் மறைந்த பின் ’மக்கள் நீதி மய்யம்’Continue Reading

ஜுலை,21- எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் அதிமுகவை  தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது, அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் என அனைவருமே , எந்த பிரச்சினையிலும் வாய் திறப்பதில்லை. எடப்பாடி பழனிசாமியின் கைக்கு அதிமுக வந்தபின், மாஜிக்கள், மாவட்டங்கள் என எல்லோருமே பொளந்து கட்டுகிறார்கள்.பலரின் பிதற்றல்களும்,உளறல்களும் பொடியன்கள் கூட பரிகாசம் செய்யும் அளவுக்கு எல்லை மீறி போய் விடுகிறது. சம்மந்தமில்லாமலும், சர்ச்சையாகவும் பேசுவதில் இன்றைக்கு அதிமுகவில் நம்பர் -1 ஆக இருப்பது திண்டுக்கல் சீனிவாசன்.Continue Reading

மயோசிடிஸ் எனும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகை சமந்தா, அண்மைக்காலமாக, ஆன்மிகத்தில் மூழ்கி விட்டார். நோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக அமெரிக்கா செல்ல இருக்கும் சமந்தா, சினிமாவை விட்டு விலகும் முடிவில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஒப்புக்கொண்ட படங்களைத்தவிர, புதிய படங்களில் நடிக்க அவர் யாருக்கும் கால்ஷீட் கொடுக்கவில்லை. சில இயக்குநர்களிடம் அவர் கதைகள் கேட்க நேரம் ஒதுக்கி இருந்தார். அதனை எல்லாம், ரத்து செய்துவிட்டார். சிகிச்சை பெற்று அமெரிக்காவிலிருந்து திரும்பியதும் அவர்Continue Reading

உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்று திரும்பி இருந்தார்.  அதன்பிறகு பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:25 மணியளவில் உம்மன் சாண்டிContinue Reading

ஜூலை, 18- மக்களவை தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர். பீகார் முதல் -அமைச்சர் நிதிஷ் குமார் ஏற்பாட்டில் கடந்த மாதம் 23-ம் தேதி பாட்னாவில் எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி ஆலோசனை நடத்தினர். காங்கிரஸ், தி.மு.க., உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர். மக்களவை தேர்தலை ஓரணியில் திரண்டு எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் 2-வது ஆலோசனை கூட்டம் பெங்களூருவில்Continue Reading

ஜுலை, 18 -இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த கன மழையினால் தலைநகர் டெல்லிக்குள் வெள்ளம் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் போது  உலகத்தின் பல நாடுகளில் வெயில் கொடுமை இதுவரை இல்லாத அளவுக்கு உள்ளது. இந்த வெப்ப அலை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், சீனா மற்றும் ஜப்பானை வறுத்து எடுத்துக் கொண்டிருக்கிறது. ஐரோப்பாவில் இத்தாலி இதுவரை இல்லாத வெப்பத்தை அனுபவித்து வருகிறது. ரோம், போலோக்னா மற்றும் புளோரன்ஸ் உள்ளிட்டContinue Reading

ஜுலை, 17- சென்னையில அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலக்கத்துறை நடத்தி வரும் சோதனையில்  சுமார் 70 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டு இருக்கிறது, மேலும் 10 லட்சம் ரூபாய் மதிப்புடைய பவுண்டு மற்றும் அமெரிக்க டாலர்களும் கிடைத்து உள்ளன. இது பற்றியும் அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.. சைதாப்பேட்டை ஸ்ரீநகர் காலனியில் உள்ள பொன்முடி வீட்டில் காலை ஏழு மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 12 மணி நேரத்திற்கும் மேலாகContinue Reading

விக்ரம்-2 படத்தை கமல்ஹாசனே தயாரித்து நடித்தார். அந்தப்படத்தில் அவருக்கு 100 கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. தற்போது நடிக்கும் இந்தியன் -2  படத்துக்கு 100 கோடி ரூபாய் ஊதியம் பெற்றுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகும் ’ப்ராஜெக்ட்-கே’ படத்தில் வில்லன் வேடத்தில் கமல் நடிக்கிறார். 30 நாள் கால்ஷீட் டுக்கு, 150 கோடி ரூபாய் அளிக்கப்பட்டுள்ளது. கொட்டும் பணத்தை பதுக்கி வைக்காமல் அள்ளி வீசுகிறார், விக்ரம் -2 வெற்றிக்கு காரணமானContinue Reading