ஜுலை,07- அமைச்சர் செந்தில் பாலாஜி மின்சாரத்துறை அமைச்சராக இருந்தபோது டிஸ்ட்ரிபியூசன் டிரான்ஸ்பார்மர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் வழங்கியதில் 397 கோடி ரூபாய் இழப்பை அரசுக்கு ஏற்படுத்தி உள்ளதாக அறப்போர் இயக்கம் என்ற தன்னார்வ அமைப்பு குற்றஞ்சாட்டி உள்ளது. அறப்போர் இயக்கத்தின்  ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் சென்னையில் வியாழன் அன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.. முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த இரண்டு வருடங்களாக 45 ஆயிரம் டிரான்ஸ்பார்மர்கள் கொள்முதலில்Continue Reading

ஜூன், 27- பாரதீய ஜனதாவுக்கு எதிராக பாட்னாவில் கடந்த வாரம் கூடிய கட்சிகள் செய்துள்ள ஊழல் தொகை 20 லட்சம் கோடி ரூபாயை தாண்டும் என்று பிரதமா் மோடி தெரிவித்து உள்ளார். இந்த ஆண்டு சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் நகருக்குச் சென்றிருந்த அவர் அங்கு மெட்ரோ ரயில்கள் தொடக்கவிழாவில் பங்கேற்றார். பின்னர் நடந்த கூட்டம் ஒன்றில் பா.ஜ.க. தொண்டர்கள் மத்தியில் பிரதமர்Continue Reading

அமலாக்கத்துறை அதிகாரிகளின் ஆப்பரேசன் குறித்த கலக்கத்தில் திமுக அமைச்சர்கள் உள்ளதாக அதிமுக நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான ஜெயகுமார் ஏளனம் பேசியுள்ளார். சென்னையை அடுத்த புழலில் அதிமுக எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் எம்.ஜி.ஆர். இலவச கணினி பயிற்சி மையம் மற்றும் இ சேவை மையத்தை அவர் திறந்து வைத்தார்.  அப்போது  ஜெயக்குமார் பேசியதாவது.. திமுக ஆட்சியை விதி 356- ஐப் பயன்படுத்தி டிஸ்மில் செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள். டிஸ்மிஸ் ராசிContinue Reading

அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான மனுக்கள் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது அவரிடம் விசாரணை நடத்துவதற்கு புதிய அனுமதியைத் தர வேண்டும் என்று அமலாக்கத்துறை தரப்பில் வலியுறுத்தப்பட்டது. வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணம் வசூலித்த வழக்கில் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதியின் பேரில் சென்னை  காவேரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதே கால கட்டத்தில் அவரிடம் மருத்துவனையில் வைத்து 8Continue Reading

சட்டவிரோதமாக செம்மண் எடுத்ததாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. கடந்த 2006-11ம் ஆண்டு திமுக ஆட்சியின் போது குவாரிகளில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடி ரூபாய்க்கு மேல் இழப்பு ஏற்படுத்தினார்கள் என்பது அமைச்சர் பொன்முடி, மகன் கவுதம சிகாமணி, உறவினர் ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் மீதான புகாராகும்.Continue Reading