‘விடாமுயற்சி ‘எப்படி இருக்கு ?

தடம், தடையறத் தாக்க உள்ளிட்ட வெற்றிப்படங்களை டைரக்டு செய்தவர் மகிழ் திருமேனி. அவர் முதன்முறையாக அஜித்துடன் இணைந்துள்ள , படம்- விடாமுயற்சி.

விடாமுயற்சி படத்தில் நடிகர் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். வில்லன்களாக ஆரவும் அர்ஜுனும் நடித்துள்ளனர்.

‘விடாமுயற்சி’இன்று உலகம் முழுக்க ரிலீஸ் ஆகி உள்ளது.

தமிழ்நாட்டில் மட்டும் 1000 திரைகளுக்கு மேல் விடாமுயற்சி ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் முதல் காட்சியை பார்த்த ரசிகர்கள் தங்கள் விமர்சனத்தை எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அதன் விவரம் .

‘தலைசிறந்த சஸ்பென்ஸ் திரைப்படமாக விடாமுயற்சி உள்ளது. திறம்பட உருவாக்கப்பட்டுள்ள திரைக்கதை ஒரு சிறந்த திரில்லர் படத்தைக் கொடுத்துள்ளது. ஒவ்வொரு காட்சியும் பதற்றத்தை அதிகரிக்கிறது. மனைவியை தொலைத்துவிட்டு அஜித் தேடும் போது வரும் ட்விஸ்ட் ஆடியன்ஸை கிளைமாக்ஸ் வரை கட்டிப்போட்டுள்ளது.

அஜித்தின் நடிப்புக்கு ஈடு இணையே இல்லை. அனிருத்தின் இசை திரில்லர் படத்தை தூக்கி நிறுத்துகிறது. ஒரு மாயாஜாலாமான புதிய அனுபவமாக உள்ளது ‘ விடாமுயற்சி ‘என பதிவிட்டுள்ளார், ஒரு ரசிகர்.

விடாமுயற்சி ஸ்டைலிஷ் திரைக்கதை உடன் கூடிய ஒரு வித்தியாசமான முயற்சி. அஜித் போன்ற மாஸ் ஹீரோவுக்கு ஒரு பில்டப் காட்சியும் இல்லாவிட்டாலும் படம் விறுவிறுப்பாகவும் பொழுதுபோக்குடனும் நகர்கிறது. இது வழக்கமான மசாலா மாஸ் படம் கிடையாது. எதிர்பாராததை எதிர்பாருங்கள் என பதிவிட்டிருக்கிறார், இன்னொரு ரசிகர்.

விடாமுயற்சி நல்ல படம் ஆனால் அஜித்திடம் இருந்து இன்னும் எதிர்பார்த்தேன். பிரேக்டவுன் படத்தின் ரீமேக் தான்- ஆனால் இதில் அஜித் – திரிஷாவின் கதை சேர்க்கப்பட்டுள்ளது. சிம்பிளான திரைக்கதை, அனைத்து நடிகர்களும் சூப்பராக நடித்திருக்கிறார்கள். சண்டைக்காட்சிகள் அருமையாக உள்ளது என குறிப்பிட்டிருக்கிறார், மற்றொருவர்.

விடாமுயற்சி படத்தில் அஜித்துக்கு நிறைய லுக் இருக்கிறது. அவை அனைத்துமே முதல் 30 நிமிடங்களில் வந்துவிடுகிறது. அஜித்தின் நடிப்பு பிரம்மிப்பூட்டுகிறது. அஜித் – திரிஷா ஜோடி அருமை.

விடாமுயற்சி படத்தின் இரண்டாம் பாதியை விட முதல் பாதி அருமை- திரில்லர் படம் தான் -ஆனால் மெதுவாக கதை நகர்கிறது. படத்தில் ட்விஸ்ட் அருமையாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. படத்தில் உள்ள ஒரே பிரச்சனை இரண்டாம் பாதி மெதுவாக நகர்வது தான். மற்றபடி நல்ல படம் என குறிப்பிட்டுள்ளார்கள், ‘அல்டிமேட் ஸ்டாரின் ரசிகர்கள்.
–.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *