திமுகவுக்கு எத்தனை இடம் ?நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்பு.

ஜுலை, 31-

மக்களவைத் தேர்தலை சந்திக்க ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணியும் முழு வீச்சில் தயாராகிவிட்டன.

இரு அணிகளும் பெரும் சேனைகளுடன் களத்தில் இறங்குவதால் போட்டி கடுமையாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கணித்துள்ளனர். ‘இன்றைக்கு தேர்தல் நடந்தால் யாருக்கு வெற்றி கிடைக்கும்?’என்ற ஒற்றைக்கேள்வியுடன் இந்தியா டிவி செய்தி சேனலும், சி என் எக்சும் இணைந்து கருத்து கணிப்பு நடத்தியது.

முடிவுகள் பரபரப்பு ரகம்

நாடு முழுவதும் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன.

இதில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 318 தொகுதிகளை கைப்பற்றும் -மோடி மூன்றாம் முறையாக பிரதமராவார் என அந்த கணிப்பு சொல்கிறது.

இந்தியா அணிக்கு 175 இடங்கள் கிடைக்கும்.

பாஜக தனியாக 290 தொகுதிகளில் வெல்லும் என்றும், அதுபோல் காங்கிரஸ் தனித்து 66 தொகுதிகளை பிடிக்கும் என்றும் கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

திமுகவுக்கு எத்தனை?

மாநில வாரியாக ஒவ்வொரு அணிக்கு கிடைக்கும் இடங்கள் பட்டியலையும் இண்டியா டிவி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம்:

தமிழ்நாட்டில் பாஜக அணிக்கு 9 தொகுதிகள் கிடைக்கும். திமுக இடம் பெற்றுள்ள ,இந்தியா அணி 30 இடங்களில் வாகை சூடும்.

நாட்டின் பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் பாஜக அணிக்கு 73 தொகுதிகளும், இந்திய அணிக்கு 7 இடங்களும் கிடைக்கும்.

மகாராஷ்டிரா

மொத்தம் – 48

பாஜக       – 24

இந்தியா   -24

மே.வங்கம்

மொத்தம்   – 42

பாஜக        – 12

இந்தியா    – 30

பீகார்

மொத்தம்    -40

பாஜக        – 24

இந்தியா     -16

கர்நாடகா

மொத்தம்   -28

பாஜக        -20

இந்தியா    -7

குஜராத்

மொத்தம் –26

பாஜக       -26

இந்தியா    – 0

 

கேரளா

மொத்தம்   -20

பாஜக          -0

இந்தியா      -20

ராஜஸ்தான்

மொத்தம்    – 25

பாஜக           -21

இந்தியா       -4

ஆந்திரா

மொத்தம்        -25

பாஜக               -0

இந்தியா           -0

ஒய்.எஸ்.ஆர்   .-18

தெலுங்கு தேசம்-7

தெலங்கானா

மொத்தம்    -17

பாஜக          -6

இந்தியா      -2

பி.ஆர்.எஸ்.  -8

ஒடிசா

மொத்தம்   – 21

பாஜக         -8

இந்தியா      -0

பிஜேடி         -13

மத்தியபிரதேசம்

மொத்தம்      -29

பாஜக          – 24

இந்தியா       -5

அசாம்

 

மொத்தம்   – 14

பாஜக        – 12

இந்தியா     -1

சத்தீஷ்கர்

மொத்தம்      -11

பாஜக          – 7

இந்தியா       -4

ஜார்க்கண்ட்

மொத்தம்    -14

பாஜக         -13

இந்தியா       -1

அரியானா

மொத்தம்       -10

பாஜக             -8

இந்தியா        -2

பஞ்சாப்

மொத்தம்     -13

பாஜக         – 0

இந்தியா      -13

டெல்லி

மொத்தம்    -7

பாஜக       -5

இந்தியா    -2

உத்தரகாண்ட்

மொத்தம்     -5

பாஜக          – 5

இந்தியா    -0

காஷ்மீர்-லடாக்

மொத்தம்       -6

பாஜக            -3

இந்தியா         -2

இமாச்சலபிரதேசம்

மொத்தம்      -4

பாஜக          -3

இந்தியா     -1

மணிப்பூர்

மொத்தம்     -2

பாஜக          -0

இந்தியா       -2

வட கிழக்கு மாநிலங்களில் மொத்தமுள்ள 9 இடங்களும் பாஜக கூட்டணிக்கே கிடைக்கும்.

கோவாவில் இரு தொகுதிகளிலும் பாஜக அணியே வெல்லும் என அந்த கருத்த கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இந்தியா என்ற கூட்டணி இன்னும் முழுமையாக அமைக்கப்படவில்லை. இருந்தாலும் எதிர்க்கட்சிகள் ஒன்று பட்டு இருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு முன்பே வரும் இந்த கருத்துக்கணிப்புகள் தேர்தல் நேரத்தில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்தும் நிலவுகிறது.

இது மட்டுமல்ல இன்னும் பல நூறு கருத்துக்கணிப்புகள் வரக்கூடும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *