அஜித் உடன் நடிக்க ஆசைப்படும் சிவராஜ்குமார்.

ஆகஸ்டு,21-

கன்னட சூப்பர்ஸ்டார் ராஜ்குமாரின் மூத்த மகன்சிவராஜ்குமார். 125 க்கும் மேற்பட்ட கன்னட படங்களில் நடித்துள்ளார். அவரை ’சிவாண்ணா’ என்றே ரசிகர்கள் அழைக்கிறார்கள். ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படத்தின்மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் நெருக்கமானார்

அவர் அளித்துள்ள பேட்டி:

’’தமிழ் சினிமாவில் ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்பதுதான் எனது முதல் விருப்பமாக இருந்தது. அது‘ஜெயிலர்’ படம் மூலம் நிறைவேறியது. படத்தின் மெகா வெற்றியால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். இளம் ஹீரோக்களில் யாருடன் சேர்ந்து நடிக்க ஆசை என கேட்கிறார்கள். அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும்.  அவர் எந்த ஹீரோயிச பந்தாவும் இல்லாமல், சுதந்திர காற்றை சுவாசிக்க அடிக்கடி பைக்கில் உலக பயணம் செல்வது நல்ல விஷயம். அதை பார்த்து நான் வியந்து இருக்கிறேன். அவருடன் ஒரு படத்திலாவது நடித்து விட வேண்டும் என விரும்புகிறேன். ஆனால் அது நடக்குமா என தெரியவில்லை. அஜித் நடித்த படங்களில் ‘விஸ்வாசம்’ எனக்கு பிடித்த படம். அது போன்ற கதை அம்சத்துடன் கூடிய ஒரு கன்னடபடத்தில் நடிக்கவும் ஆசை இருக்கிறது’’.

இவ்வாறு மனம் திறந்து பேசினார் சிவராஜ்குமார். ’ஆசை’ அஜித் மனது வைத்தால், சிவாண்ணாவின் ஆசை நிறைவேறும்.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *