அடிக்கடி சாலை விபத்து… திருநங்கையை வைத்து சாலைக்கு திரிஷ்டி கழித்த போக்குவரத்து போலீசார்…

சென்னை மதுரவாயல் பகுதியில் அடிக்கடி சாலை விபத்து ஏற்படுவதால், போக்குவரத்து போலீசார் சாலைக்கு திருநங்கையை வைத்து திரிஷ்டி கழித்ததுள்ளனர்.

மதுரவாயல், வானகரம் மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலைகளில் அடிக்கடி சாலை விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் இரண்டு விபத்துகளில் இரண்டு பேர் அடுத்தடுத்து பலியானார்கள். இந்த பகுதிகளில் அதிக அளவில் விபத்துகளும், உயிரிழப்புகளும் ஏற்படுவதால் அதனை தடுக்க போக்குவரத்து போலீசார் திருஷ்டி கழிக்க முடிவு செய்துள்ளனர்.

இதற்காக திருநங்கை ஒருவரை போக்குவரத்து போலீசார் போலீஸ் வாகனத்திலேயே ஏற்றிச் சென்று எங்கெல்லாம் சாலை விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் சென்று பூசணிக்காய் மற்றும் எலுமிச்சம்பழத்தை சுத்தி போடும் நிகழ்வை செய்தனர். இதனை கண்ட வாகன ஓட்டிகள் நெகிழ்ச்சி அடைந்தனர். மேலும் சாலைகளில் பூசணிக்காய் உடைக்க கூடாது என போலீசார் அறிவுறுத்தி வரும் நிலையில் போலீசாரே சாலையின் ஓரத்தில் பூசணிக்காய் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *