கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில்
கோலோச்சி வருபவர் ‘வைகைப்புயல் வடிவேலு.
வசன உச்சரிப்பு மற்றும் உடல் மொழியில் தனிப்பாணியை உருவாக்கிகொண்ட வடிவேலு, நடுவில் கொஞ்ச ஆண்டுகள் காணாமல் போனார்.
இயக்குநர் ஷங்கர் தயாரித்த ‘இம்சை அரசன்’ படத்துக்கு
கால்ஷீட் கொடுக்காமல் சொதப்பியதால், அவருக்கு
தயாரிப்பாளர் சங்கம் ‘ரெட்’ கார்டு போட்டு
சினிமாவில் இருந்து ஒதுக்கி வைத்தது.
அபராதம் கட்டி மீண்டும் நடிக்க வந்த வடிவேலுவுக்கு
‘மாமன்னன் ‘படம் மட்டும் வெற்றிப்படமாக
அமைந்தது. நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், சந்திரமுகி -2
போன்ற படங்கள் படுதோல்வி அடைந்தன.
தமிழ் புத்தாண்டு அவருக்கு நல் புத்தாண்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இயக்குனர் சுந்தர்.சி சில ஆண்டுகள் இடைவெளிக்கு பிறகு மீண்டும் வடிவேலுவுடன் இணைந்துள்ள படம் கேங்கர்ஸ். கேத்ரின் தெரசா நாயகியாக நடித்துள்ள இந்த படத்தில், முனிஷ்காந்த், ரெடின் கிங்ஸ்லே, மைம் கோபி, பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் அடுத்த மாதம் 24 – ஆம் தேதி திரையரங்குகளில்
வெளியாக உள்ளது.
இதனை தொடர்ந்து ஜுலை மாதம் பஹத் ஃபாசிலுடன்
வடிவேலு நடித்துள்ள ‘மாரீசன் ‘படம் ரிலீஸ் ஆகிறது.
இரண்டு படங்களும் வடிவேலுவுக்கு திருப்பு
முனையாக இருக்கும் என நம்பப்படுகிறது.
—