அடுத்தவர் தலைப்புகளை அபகரிக்கும் கோடம்பாக்கம் !

கோலிவுட் எனப்படும் தமிழ்த் திரைஉலகம் , அடுத்தவர் கதைகளை ‘காபி’ அடித்து, சினிமாக்கள் எடுப்பதை , பல ஆண்டுகளாகவே வாடிக்கையாக கொண்டுள்ளது. பிரசித்தி பெற்ற இயக்குநர்கள் கூட இந்த விஷயத்தில் முன்னோடியாக இருந்ததை கோடம்பாக்கம் அறியும்.

சமீபத்திய உதாரணம் –அஜித்தின் ‘விடாமுயற்சி’. ஹாலிவுட் படமான ‘பிரேக்டவுன்’ படத்தை காப்பி அடித்து, இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல். இந்த ஆங்கிலப்படத்தை தயாரித்த்த நிறுவனம் , விடாமுயற்சியை தயாரித்துள்ள லைகா நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கதையை மட்டுமில்லாமல், அடுத்தவர்கள் ‘டைட்டில்’களையும் எந்த வித சங்கோஜமும் இல்லாமல், நம்ம ஊர் ஆட்கள் சுட்டு விடுகிறார்கள். பல ஆண்டுகளுக்கு முன் விஜய் நடித்த படத்துக்கு காவல்காரன்’ என தலைப்பிட்டு ஷுட்டிங் நடந்தது.

எம்.ஜி.ஆர்.நடித்த காவல்காரன் படத்தை தயாரித்த ஆர்.எம்.வீரப்பன் , அந்த டைட்டிலுக்கு அனுமதி கொடுக்க மறுத்து விட்டார். இதனால் காவலன் என பெயர் மாற்றப்பட்டது.
ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், படிக்காதவன் போன்ற படங்கள், அதே பெயரில், தனுஷ் நடிப்பில் வெளிவந்தன. மருமகனுக்காக , அவற்றை விட்டுக்கொடுத்தார், மாமனார்.அந்த படங்களில் தயாரிப்பாளர்கள் வேறு வேறு ஆட்கள். எனினும்,ரஜினியின் முகத்துக்காக, ‘டைட்டில்’ தியாகம் செய்தனர்.

சிவாஜி மற்றும் ரஜினி நடித்து கே.பாலாஜி தயாரித்த படம் ‘விடுதலை’. அந்த டைட்டிலை இயக்குநர் வெற்றி மாறன் சுட்டு, ஒன்றல்ல, இரண்டு படங்களை டைரக்டு செய்து பெயர் வாங்கியுள்ளார்.

ஏ.பி. நாகராஜன் கை வண்ணத்தில் உருவான ‘திருவிளையாடல்’ ஒரு காவியம். தனது மசாலா படத்துக்கு அந்த டைட்டிலை சூட்டினார்,தனுஷ். சிவாஜி ரசிகர்கள் கொந்தளித்தனர். இதனால் நவீன திருவிளையாடல் ஆரம்பம் என படத்தின் பெயரை மாற்றினார்கள்.

கலைஞர் –சிவாஜி . உள்ளிட்டோரை இன்றும் நினைவு கூறும் படம் ‘பராசக்தி’ தமிழில் பிரளயத்தை உருவாக்கிய காவியம். அந்த தலைப்பை, சிவகார்த்திகேயன் படத்துக்கு வைத்துள்ளார், டைரக்டர் சுதா கொங்கரா. சிவாஜி ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்ப்பு காட்டததால், அந்த தலைப்புடன் பட ஷுட்டிங் ஆரம்பம் ஆகியுள்ளது.

இதேபோல் பழைய டைட்டில்களை அபகரித்து வெளியான படங்கள் எண்ணிக்கை,- அபூர்வ சகோதரர்கள்,‘ நினைத்தாலே இனிக்கும், நெஞ்சிருக்கும் வரை, என பல டஜன்கள் தேறும்.

கதைக்குத்தான் பஞ்சம் . தலைப்புகளுக்கு கூடவா தட்டுப்பாடு ?

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *