டிசம்பர்-25.
கிண்டியில் அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் மாணவி ஒருவர் நேற்றிரவு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான தகவல் சென்னை நகரில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது. குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு காவல் துறை மூன்று தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டு இருக்கிறது.
நேற்றிரவு உணவு அருந்திவிட்டு அந்த மாணவியும் சக மாணவரானஅவருடைய காதலனும் பேசிக்கொண்டிருந்து உள்ளனர். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் அந்த மாணவரை அடித்து விரட்டி விட்டு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி இருக்கின்றனர்.
இது குறித்து மாணவி அளித்த புகாரின் பேரில்கோட்டுர்புரம் காவல் நிலையை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர். மாணவியிடம் அத்துமீறியவர்கள் பல்கலைக் கழக மாணவரகளா அல்லது வெளி ஆட்களா என்பது தெரியவில்லை. கேமிரா காட்சிகள் அடிப்படையில் ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.
பாதிக்கப்பட்ட மாணவி, முதற்கட்ட விசாரணை முடிவடைந்ததை அடுத்து மன ரீதியான சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்ட்டு உள்ளார். பல்கலைக் கழக வளாகத்தில் பணியில் இருந்த காவலர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களும் விசாரணை க்கு ஆளாகி இருக்கின்றனர்.
அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்த இந்த பாலியல் துன்புறுத்தலுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.
*