பிப்வராி -11,
பீகார் மாநிலத்தை சேர்ந்த தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர்.தனது ,ஐபேக் நிறுவனத்தின் மூலம், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு தேர்தல் வியூகங்களை வகுத்து தருபவர் .
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்கு ,தேர்தல் வியூகங்களை செய்து கொடுத்தார்,பிரசாந்த் கிஷோர்.
அதன் பிறகு, எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அவர் தேர்தல் வியூகங்களை வகுத்து தரும் பணிகளில் ஈடுபடவில்லை.(பீகாரில் அவர் தனிக்கட்சி ஆரம்பித்து, இடைத்தேர்தலில் மண்ணை கவ்வியது தனிக்கதை.)
விஜய், தமிழக வெற்றிக்கழகம் கட்சியை தொடங்கிய பின், விக்கிரவாண்டி மாநாட்டுக்கு முன்பாகவே, விஜய்யை சந்திக்க, பிரசாந்த் கிஷோர் நேரம் கேட்டிருந்தார். அந்தச் சந்திப்பு நடைபெறவில்ல.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகிய ஆதவ் அர்ஜுனா அண்மையில் தவெகவில் இணைந்தார். அந்த கட்சியின் தேர்தல் பிரிவு பொதுச் செயலாளராக ஆதவ் அர்ஜுனா நியமிக்கப்பட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக விஜய் – பிரசாந்த் கிஷோர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்ட்டது.
சென்னை பனையூரில் உள்ள தவெக அலுவலகத்தில் விஜயை , பிரசாந்த் கிஷோர் நேற்று சந்தித்து பேசினார். இருவரும் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக பேசியுள்ளனர்.
அதிமுகவின் தேர்தல் வியூக பொறுப்பாளராக பிரசாந்த் கிஷோர் செயல்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரசாந்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் ஏற்கனவே சந்தித்து, இது குறித்து விவாதித்துள்ளார்.
இந்த சூழலில்,பிரசாந்த் கிஷோர் தவெக தலைவர் விஜய்யை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் ,அதிமுகவுடன், தவெக கூட்டணி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.கூட்டணி உருவானால், அதிமுக- தவெக ஆகிய இரு கட்சிகளின் தேர்தல் வியூக வேலைகளை ,பிரசாந்த் கிஷோரே மேற்கொள்வார் .