பிப்ரவரி-05.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கி இருந்ததாக அனுப்பப்பட்ட இந்தியர்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன.
அந்த நாட்டின் டெக்சாசின் சான் அண்டியானாவில் இருந்து செவ்வாய்க் கிழமை புறப்பட் அமெரிக்க ராணுவத்தின் சி-17 விமானம் இன்று மதியம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தரசஸ் விமான நிலையத்தில் தரை இறங்கியது.
இதில் அதிகபட்சமாக ஹரியானா மற்றும் குஜராத்தைச் சேர்ந்த தலா 30 பேர் அடங்குவர். நாடு கடத்தப்பட்டவர்களில் மொத்தம் 30 பேர் பஞ்சாபில் வசிப்பவர்கள்.
உத்தரபிரதேசம் மற்றும் சண்டிகரைச் சேர்ந்த தலா இரண்டு பேர், மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூன்று பேரும் பட்டியலில் உண்டு. நாடு கடத்தப் பட்டவர்களில் 25 பெண்கள் மற்றும் 12 சிறார்களும் அடங்குவர். நான்கு வயது குழந்தையும் பெற்றோருடன் அழைத்து வரப்பட்டிருந்தது. இவர்களில் நாற்பத்தெட்டு பேர் 25 வயதுக்கு உட்பட்டவர்கள்.
இந்த 104 பேரில் சிலர் சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைந்தவர்கள். மற்றவர்கள் விசா காலம் முடிந்த பிறகும் தங்கியிருந்தவர்கள்.
இவர்களின் சிலரை கைவிலங்கிட்டு அழைத்து வரப்படட காட்சிகள் வெளியாகி உள்ளன. இதற்கு காங்கிரஸ் கட்சி கடுமையான கண்டனத்தை தெரிவித்து உள்ளது
டொனால்ட் டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்ற பிறகு பிரதமர் மோடி முதல் முறையாக அடுத்த வாரம் வாஷிங்டன் செல்ல உள்ளார். இந்த நிலையில் நாடு கடத்தல் நடைபெற்று உள்ளது.
டிரம்ப் ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நாட்டில் சட்டவிரோதமாக தங்கியருந்தவர்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர். இந்தியர்கள் வெளியேற்றப்படுவது இதுவே முதன் முறையாகும். தொடர்ச்சியாக மேலும் பலர் இந்தியாவுக்கு அனுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
*