டிசம்பர்-2.
ஊழல் மற்றும் மோசடி வழக்குகளில் ஜாமீனில் விடுவிக்க்கப்பட்ட செந்தில் பாலாஜி, மூன்றாவது நாளே அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய அவசரம் என்ன என்று உச்சநீதிமன்றம் கேட்டு உள்ளது.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜி போக்குவரத்துக் கழகங்களில் ஆட்களை நியமிப்பதற்கு லஞ்சம் வாங்கினாா் என்பது வழக்காகும். இந்த வழக்குகள் நிலுவையில் இருக்கும் போது திமுக அரசினால் மின்துறை அமைச்சராக நியமிக்கப்பட்ட அவரை கடந்த 2023- ஆம் ஆண்டு ஜுன் மாதம் அமலாக்கத் துறை கைது செய்து சிறையில் அடைத்தது. நீண்ட சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு இந்த ஆண்டு செப்டம்பர் 26- ஆம் தேதி ஜாமீனில் விடுதலையான அவர் அடுத்த மூன்று நாட்களில் மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதால் ஊழல் வழக்கின் விசாணை பாதிக்கப்படும் என்று வித்யாதரன் என்பவர் தாக்கல் செய்த மனு மீது இன்று உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தியது. அப்போது மனுதாரர் வித்யாதரன் தெரிவித்து உள்ள குற்றச்சாட்டுகளில் நியாயம் உள்ளது என்று கருத்துத் தெரிவித்து நீதிபதி ஓகா. வழக்குகள் நிலுவையில் உள்ள போது அமைச்சராக பொறுப்பேற்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பினார். அவர் அமைச்சராகி விட்டதால் ஊழல் வழக்குத் தொடுத்தவர்கள்களுக்கு அழுத்தம் ஏற்படாத என்றும் நிதிபதி கேட்டார்.
இதையடுத்து வழக்கின் விசாணை இந்த மாதம் 13- ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளது.
உச்சநீதிமன்றம் தெரிவித்து உள்ள கருத்தை அடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான விமர்சனங்கள் அதிகரித்து உள்ளன.
*