ஆணவக்கொலை தடுப்பு சிறப்பு குழு அமைப்பு- நெல்லை கமிஷனர் தகவல்

ஏப்ரல்.28

நெல்லையில் ஆணவக் கொலைகளை தடுப்பதற்காக மாநகர துணை ஆணையர் அடங்கிய சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நெல்லை மாநகரத்தில் ஆணவக் கொலை தடுப்பு தொடர்பாக மாநகர துணை கமிஷனர் (கிழக்கு), மாவட்ட சமூகநல அலுவலர் மற்றும் மாவட்ட ஆதி திராவிட நல அலுவலர் அடங்கிய சிறப்பு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், கலப்புத் திருமணம் செய்தவர்களை துன்புறுத்துவது, மிரட்டுவது தொடர்பாக புகார் தெரிவிக்க 24 மணி நேரமும் தனிப்பிரிவு செயல்படும். எனவே, சம்பந்தப்பட்டவர்கள் புகார் தெரிவிக்க நெல்லை மாநகரம் தனிப்பிரிவு 9498101729 மற்றும் மாநகர காவல் கட்டுப்பாடு அறை எண் 0462-2562651, 100 ஆகியவற்றில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *