ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து ரஜினியின் அரசியல் பயணம்

ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர்’ திரைப்படம்  வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக அமைத்துள்ள ஜெயிலர் முதல் நாளில் இருந்து வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது. 8 நாட்களில் உலகளவில் 400  கோடி ரூபாயை கடந்து வசூல் சாதனை செய்துள்ளது.

பட ரிலீசுக்கு முதல் நாள் இமயமலை புறப்பட்டு சென்ற ரஜினி, ரிஷிகேஷ், பத்ரிநாத், துவாரகா, பாபாஜி குகை உள்ளிட்ட இடங்களுக்கு  சென்றார். முதலில் ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்துக்கு சென்று,துறவிகளை சந்தித்து உரையாடினார். பின்னர் உத்தரகாண்டில் வியாசர் குகைக்கு சென்று வழிபட்டார்.

கடைசி நிகழ்ச்சியாக, துவாரஹட்டில் உள்ள பாபாஜி குகைக்குசென்றார். கையில் குச்சியை ஊன்றியபடி கரடுமுரடான பாதையில், நண்பர்களுடன் அவர் பயணம் மேற்கொண்டார்.பாபாஜி குகைக்குள் அவரும், அவரது நண்பர்களும் தியானத்தில் ஈடுபட்டனர்.

இமயமலை பயணத்தை நிறைவுசெய்து திரும்பிய ரஜினிகாந்த், ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்தார். அவரது குடும்பத்தினருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். பின்னர் ராஞ்சியில் உள்ள யோகதா சத்சங்க ஆசிரம தலைமையகத்துக்கு சென்று துறவிகளை சந்தித்தார். அங்கு காலை உணவு அருந்தினார்.

இன்று லக்னோ செல்லும் ரஜினிகாந்த்,  உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து விட்டு சென்னை திரும்ப உள்ளார். ., அடுத்து ஞானவேல் இயக்கும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ள ரஜினி , அதற்காக  தன்னை தயார்படுத்த இருக்கிறார்..

இந்தப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகிறது.இது ரஜினியின் 170 வது படம். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *