ஆர்ஆர்ஆர் படத்தில் வில்லனாக நடித்த ரே ஸ்டீவன்சன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 58
ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட் ,ஸ்ரேயா, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்து மெகா ஹிட் ஆன திரைப்படம் ஆர் ஆர் ஆர். தமிழ் ,தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் சுமார் 1150 கோடிக்கு மேல் வசூலை வாரி குவித்தது . இந்த படத்தில் சர் ஸ்காட் என்ற ஆங்கிலேயர் கேரக்டரில் நடித்த நடிகர் ரே ஸ்டீவன்சன் தனது அசாத்திய நடிப்பால் பலரின் வரவேற்பை பெற்றார்.
இந்நிலையில் உடல்நல குறைவால் ரே ஸ்டீவன்சன் இத்தாலியில் நேற்று காலமானார். இவரது மறைவுக்கு ஆர் ஆர் ஆர் பட குழு தங்களது இரங்கலை தெரிவித்துள்ளது . அதில் “அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்தி, ரே ஸ்டீவன்சன், நிம்மதியாக ஓய்வெடுங்கள். நீங்கள் எங்கள் இதயங்களில் SIR SCOTT-ஆக என்றென்றும் இருப்பீர்கள்”என்று பதிவிட்டுள்ளது.
முன்னதாக மார்வலின் தோர், பிரபல வெப்சீசான வைகிங்ஸ், ஐரோப்பிய தொலைக்காட்சி தொடர்கள் உள்ளிட்ட பலவற்றின் ரே ஸ்டீவன்சன் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.