இசை அமைக்க இளையராஜாவுக்கு அதிக நேரமான பாடல் !

இசை அமைப்பாளர் இளையராஜாவிடம்
, ‘நீங்கள் இசை அமைக்க அதிக நேரம்
எடுத்துக்கொண்ட பாடல் எது ?’ எனறு கேட்டதற்கு அவர் அளித்துளள் பதில சுவாரசியமானது

அவர் அளித்த பதில்:

‘ஒரு முறை எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தை என் ரெக்கார்டிங்கு வாடா’ என கூப்பிட்டேன் .‘காலை 11 மணிக்கு முக்கியமான
வேலை இருக்கு ..முடியாதுடா ‘ என்றான்.
‘11 மணிக்குள் முடிச்சிடலாம்..பாட்டு ரெடி.வந்து பாடு’ என்றேன்.

வந்தான்.. பாட்டை கத்துக்கிட்டான்.. பாடினான்..பாடிக்கொண்டே இருந்தான். எல்லா டேக்குகளிலும் தவறு நடந்து கொண்டே இருந்தது. ஒரு கட்டத்தில் ‘ராகம் சரியா வரலையேடா ? என்னடா பண்றது ?’ என அழுது விட்டான்.

அவனுக்கு எல்லாத்தையும் சொல்லி திருத்தி தந்து பாடல் முடியும்போது மாலை 4 மணியாகி விட்டது.அந்த பாடல், காதல் ஓவியம் படத்தில் இடம் பெற்ற ‘சங்கீத ஜாதி முல்லை’.என்றார், இளையராஜா.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *