இந்தியாவில் 39% பேர் ஆன்லைன் மோசடியால் பாதிப்பு – ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்..

மே.3

இந்தியாவில் கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 39 சதவீதம் பேர் ஆன்லைன் மோசடியால் பாதிக்கப்பட்டுள்ளதாக நொய்டாவைச் சேர்ந்த பிரபல நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க அதன் மூலம் நடைபெறும் மோசடிகளும் உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், இந்தியாவில், ஆன்லைன் மூலம் நடைபெறும் மோசடிகள் குறித்து நொய்டாவைச் சேர்ந்த ‘லோக்கல் சர்க்கிள்ஸ் ‘ என்ற பிரபல நிறுவனம் மிகப் பெரிய அளவில் ஆய்வு ஒன்றை நடத்தியது.

அந்த வகையில், நாடு முழுவதும் உள்ள 331 மாவட்டங்களைச் சேர்ந்த 32 ஆயிரம் குடும்பத்தினர் இந்த ஆய்வில் பங்கேற்றுள்ளனர். அவர்களில் 66 சதவீதத்தின் ஆண்கள், 34 சதவீதத்தினர் பெண்கள். இந்த ஆய்வின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 39 சதவீதத்தினர் ஆன்லைன் பண மோசடியால் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறார்கள். அவர்களில் 24 சதவீதத்தினருக்கு இழந்த பணம் திரும்பக் கிடைத்துள்ளது. ஆனால் புகார் செய்தவர்களில் 70 சதவீதத்தினர் தங்களுக்கு எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர். 23 சதவீதத்தினர் கிரெடிட் கார்டு அல்லது டெபிட் கார்டு மோசடி அனுபவம் தங்களுக்கு இருப்பதாகக் கூறியுள்ளனர்.

ஆன்லைனில் விளம்பரங்களைப் பார்த்து, குறிப்பிட்ட இணையதளத்தில் பணத்தைச் செலுத்தி விட்டு, பொருள் வரும் என எதிர்பார்த்து காத்திருந்தும், பொருட்கள் வினியோகம் செய்யப்படாமல் ஏமாற்றப்பட்டதாக 13 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.

10 சதவீதத்தினர் ஏ.டிஎம்.கார்டு மோசடிக்கு ஆளாகியுள்ளனர். 10 சதவீதத்தினர் வங்கிக்கணக்கு மோசடி, 16 சதவீதத்தினர் பிறவகையான மோசடிகளில் சிக்கி ஏமாற்றமடைந்துள்ளனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 30 சதவீதத்தினரில் குடும்பத்தில் தலா ஒருவர் ஆன்லைன் பண மோசடி பாதிப்புக்கு உள்ளாகியுள்ளார். 9 சதவீதத்தினர் தங்கள் குடும்பங்களில் ஒன்றுக்கு மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதேநேரத்தில், 57 சதவீதத்தினர் தாங்களும், தங்கள் குடும்பத்தினரும் இந்த ஆன்லைன் பண மோசடியில் சிக்காமல் தப்பியுள்ளதாகக் கூறியுள்ளனர். ஆன்லைன் பண மோசடி செய்யப்பட்டவர்களில் 18 சதவீதத்தினர் முறைப்படி உரிய இடத்தில் அல்லது நிறுவனத்தில் புகார் செய்துள்ளனர். அவர்களுக்கு பணம் திரும்பக் கிடைத்துள்ளது. 6 சதவீதத்தினர் அதிகாரிகளிடம் புகார் செய்து, பணம் திரும்பக்கிடைத்ததாக தெரிவித்துள்ளனர். 41 சதவீதத்தினரின் புகார் மீது இன்னும் தீர்வு கிடைக்காமல் பிரச்சினை நிலுவையில் இருப்பதாகக் கூறியுள்ளனர். 12 சதவீதத்தினர் மோசடி தொடர்பாக புகார் கொடுக்க விரும்பவில்லை எனத் தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *