June 10, 23
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் பூவிருந்த வல்லியை சேர்ந்த விபூஷ்னிக்கும் கடந்த 1ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இன்பச் சுற்றுலாக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர். காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு வாரத்தில் இருவரும் விபத்தில் இறந்த சம்பவம் மணமக்கள் குடும்பத்தினர், உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில் அவர்களது உடல்களை சென்னை கொண்டு வர ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.