ஜுன்,26- அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது சட்டப்படி சரியா? தவறா என்ற விவாதம் அனைத்துத் தரப்பிலும் நடை பெறுகிறது. சட்டம் எது சொன்னாலும் கைது செய்யப்பட்டுள்ள ஒருவர் அரசியல் நெறிப்படி அமைச்சராக நீடிக்கக்கூடாது என்று சொல்கிறவர்களும் இருக்கிறார்கள்.
இந்த சூழலில் செந்தில் பாலாஜி எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு அதிமுக முன்னாள் எம்.பி ஜெயவர்த்தன் தொடர்ந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் எந்த உத்தரவும் இல்லாமல் தலையிட முடியாது என்று திட்டவட்டமாக தெவித்துவிட்டது.
இதையடு்த்து வழக்கு விசாரணையை ஜூலை 7ம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
இதனிடையே செந்தில் பாலாஜி தொடர்பாக அவருடைய மனைவி மேகலா தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்றத்தில் நாளை( செவ்வாய் கிழமை) விசாரணைக்கு வருகிறது.முக்கியத்துவம் இந்த வழக்கின் போதுதான் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அனுமதி கிடைக்குமா என்பது தெரியவரும்.
000