உம்மன் சாண்டி உடலுக்கு சோனியா, ராகுல், ஸ்டாலின் கண்ணீர் அஞ்சலி. கேரளா மக்களின் தலைவராக இருந்தவர் என்று புகழாரம்.

உடல்நலக் குறைவால் காலமான கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியின் உடலுக்கு சோனியா, ராகுல் காந்தி தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.

தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த உம்மன் சாண்டி, கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெர்மனியில் சென்று சிகிச்சை பெற்று திரும்பி இருந்தார்.  அதன்பிறகு பெங்களூருவில் சின்மயா மருத்துவமனையில் தொடர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி அதிகாலை 4:25 மணியளவில் உம்மன் சாண்டி உயிர் பிரிந்தது.

அவருடை உடல் பெங்களூருவில் உள்ள கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜானின் இல்லத்துக்கு கொண்டு வந்து அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு அவருடைய உடலுக்கு காங்கிரஸ் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் வந்து, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

இதேபோன்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா  ஆகியோரும் மலர்வளையம் வைத்து மரியாதை செய்தனர்.

அஞ்சலி செலு்த்திய பின்னர்  பேசிய ராகுல் காந்தி, “கேரளத்தின் உணர்வையும், இந்தியாவின் உணர்வையும் பிரதிநிதித்துவப்படுத்தியவர் சாண்டி. அவர் கேரள மக்களின் உண்மையான தலைவராக இருந்தார். நாம் அனைவரும் அவரை இழந்துவிட்டோம். அவரை மிகவும் நேசித்தோம், அவரை அன்புடன் நினைவில் கொள்வோம். அவரது குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த மற்றும் கவனித்துக் கொள்ளும் அனைவருக்கும் இரங்கல் தெரிவித்துக்கொகிறோம்” என்று கூறினார்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *