ஜனவரி-24
அமெரிக்கவில் பல ஆயிரம் கர்ப்பிணிப் பெண்கள் பிப்ரவரி 19 -ஆம் தேதிக்கு முன்பே குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு மருத்துவமனைகளில் பதிவு செய்வது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
அமெரிக்காவில் வசிப்பவர்களில் யாரேனும் ஒருவர் அந்த நாட்டு குடிமகனாக இல்லாவிட்டல் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தை, அமெரிக்கா குடிமகனாக கருதப்பட மாட்டார்கள் என்று புதிய அதிபராக நான்கு நாட்கள் முன்பு பதவி ஏற்ற டிரம்ப் பிறப்பித்த உத்தரவுதான் இதற்கு காரணம். இந்த உத்தரவு பிப்ரவரி 20-ஆம் தேதி நடை முறைக்கு வரும் என்றும் அவா தெரிவித்து இருக்கிறார்.
அமெரிக்காவில் தற்காலிக எச்-1 பி மற்றும் எல் 1 – விசாக்கள் மூலம பல ஆயிரம் பேர் பணி செய்கின்றனர். அவர்கள் அமெரிக்காவின் நிரந்த குடிமகன் எனப்தற்கான கிரின் கார்டு பெறுவதற்காக காத்திருக்கின்றனர். இவர்கள் கிரீன் கார்டு வைத்திருக்காத பெற்றோர் என்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் அமெரிக்க குடிமகனாக கருதமாட்டார்கள்.
இதனால் அங்கு வேலையில் இருக்கும் நிரந்தர குடியுரிமை இலலாத பெண்களில் கர்ப்பமாக இருப்பவர்கள் பிப்ரவரி 19 – ஆம் தேதியே குழந்தை பெற்றுக் கொள்வதற்கான முயற்சிகளில் இறங்கி உள்ளனர். இதற்காக மருத்துவமனைகளை நாடி அறுவை சிகிச்சை மூலம் குழந்தைப் பெற்றுக் கொள்வதற்கு பதிவு செய்ய ஆரம்பித்து உள்ளனர்.
முன் கூட்டியே குழந்தைப் பெற்றுக் கொள்வது தாயுக்கும் குழந்தைக்கும் நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்
இதனிடையே சியாட்டல் நீதிமன்றம் குடியுரிமை தொடர்பான டிரம்பின் உத்தரவக்கு எதிராக தீர்ப்பளித்து உள்ளது. இந்த உத்தரவு அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை இல்லாதவர்களை எந்த அளவு காப்பாற்றும் என்பதை பொறுத்திருந்துப் பார்க்க வேண்டும்
*