எம்.ஜி.ஆர்.- ன் நிறைவேறாத ஆசைகள் !

கல்கியின் ‘பொன்னியின் செல்வன் ‘ நாவலை சினிமாக்எடுக்க வேண்டும், அதில் தான் , நாயகனாக நடித்து, இயக்கி, தயாரிக்க வேண்டும் என்பது எம். ஜி.ஆரின் ஆசை. அது ஈடேறவில்லை.

ஆப்பிரிக்க நாட்டு காடுகளில் ஒரு படம் செய்ய
வேண்டும் என்பதும் அவரது விருப்பம்.தனது ‘உலகம் சுற்றும் வாலிபன் ‘ படத்தின் கடைசியில் அந்த படத்தின் ‘டைட்டில்’பெயர் கூட போட்டிருந்தார்.
‘கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு’.இதற்கான லோகேஷனையும் அவர் அங்கு சென்று பார்த்து வந்தார். அதுவும் நடக்கவில்லை.

இன்னொரு ஆசை என்ன ?
அவரே சொல்கிறார்.

1979 -ஆம் ஆண்டு சென்னை கலைவாணர் அரங்கில் குழந்தைகள் திரைப்பட விழாவை தொடங்கி வைத்து
எம் .ஜி.ஆர். பேசினார்.
அப்போது அவர் சொன்னது:

‘இங்கே ‘தூங்காதே தம்பி தூங்காதே’ பாட்டை
பற்றி குறிப்பிட்டார்கள்.‘தூங்காதே தம்பி தூங்காதே’என்ற தலைப்பில்ஒரு கதையையும், உரையாடலையும் நானே எழுதி திரைப்படமாக தயாரிக்க திட்டமிட்டிருந்தேன் –
ஆனால் அதற்குள் நிலைமாறி இன்று முதல்வராக
இருக்கிறேன் –ஆனாலும் என்றாவது ஒருநாள்
நானே அந்த படத்தை நிச்சயம் எடுப்பேன்
எப்போது என்று கேட்டால்,அதனை இப்போது
சொல்ல முடியாது –

நானே அந்தப்படத்தை இயக்க வேண்டும் என்பது
எனது ஆசை –‘ என்று தெரிவித்தார்.

எம் .ஜி.ஆரின் அந்த ஆசையும் கடைசிவரை
நிறைவேறாமல் போயிற்று,

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *