ஏ.டி.எம். பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றம் – பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி

மே.2

இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கி ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கான புதிய விதிகளை நேற்று முதல் அமல்படுத்தியுள்ளது. அதன்படி, ஏடிஎம்.-ல் பணம் எடுக்க இனி வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எந்த ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதாக இருந்தாலும், முதலில் அந்த குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். ஏடிஎம் மையத்திற்குச் சென்றாலும், வங்கி கணக்கில் உள்ள பணத்தை பார்க்காமல், பணத்தை எடுக்க முடிவு செய்யக் கூடாது.

அதாவது, வங்கிக் கணக்கில் போதுமான பணம் இல்லாதபட்சத்தில், ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்க முயற்சி செய்தால், குறைந்த பேலன்ஸ் காரணமாக பரிவர்த்தனை செய்ய முடியாமல், அந்த முயற்சி தோல்வியடையும். அப்படிஆகும் பரிவர்த்தனைகளுக்கு, 10 ரூபாயும், அதன் ஜிஎஸ்டியையும் சேர்த்து வங்கி உங்களுக்கு அபராதமாக விதிக்கிறது.

இதேபோல், மற்ற கட்டணங்களையும் அதிகரிக்க பஞ்சாப் நேஷனல் வங்கி திட்டமிட்டுவருவதாக தெரிகிறது. டெபிட் கார்டு அல்லது ப்ரீபெய்டு கார்டுகளின் வருடாந்திர கட்டணம் மற்றும் பராமரிப்பு கட்டணமும் உயர்த்தப்படவிருப்பதாகவும் தெரிகிறது. மேலும், பிஓஎஸ் மெஷின்கள் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் செய்யப்படும் இ-காமர்ஸ் பரிவர்த்தனைகளுக்கு கட்டணங்கள் விதிக்கப்படவுள்ளது.

எனவே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் கணக்கு வைத்திருப்பவர்கள் இனி இவற்றையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இல்லையெனில், தேவையற்ற சிரமங்களை சந்திக்க வேண்டி வரும். மேற்கண்ட இந்த விவரங்களை பஞ்சாப் நேஷ்னல் வங்கி தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

அதேநேரத்தில், ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியுற்று உங்கள் கணக்கில் இருந்து பணம் எடுப்பட்டால், ஒரு வாரத்திற்குள் பணம் உங்கள் வங்கிக் கணக்கிற்கு திரும்ப வந்துவிடும். அப்படி வராதபட்சத்தில், வங்கியில் புகார் அளிக்கலாம். அந்த புகாரின்மீது ஒரு மாதத்திற்குள் பிரச்னை தீர்க்கப்படாவிட்டால், ரூ. 100 உங்கள் வங்கிக் கணக்கிற்கு அபராத தொகையாக வங்கி நிர்வாகம் உங்களுக்கு செலுத்தும்.

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *