ஜுலை,19-
‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் கடந்த 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாவீரன்’. சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் வெளியானது. இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் , யோகி பாபு ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது.
‘மாவீரன்’ திரைப்படத்திற்கு விஜய் சேதுபதி பின்னணி குரல் கொடுத்திருந்தார்.ஆனால் அதற்காக அவர் சம்பளம் ஏதும் வாங்கவில்லை. இதனை இயக்குனர் மடோன் அஸ்வின்,பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
’’மாவீரன் படத்தில் குரல் கொடுக்க விஜய் சேதுபதி ஒரு ரூபாய் கூட பணம் வாங்கவில்லை. அவர் என்ன சொன்னார் தெரியுமா?
’’ நானும் சிவகார்த்திகேயனும் முதல்முறையாக கோடம்பாக்கத்தில் இந்த டிரெண்டை ஆரம்பிப்பதில் பெருமை அடைகிறேன், அதனால் இதற்கு எனக்கு பணம் வேண்டாம். சிவகார்த்திகேயனுக்காக இதைச் செய்வதில் மகிழ்ச்சியாக உணர்கிறேன்.சினிமா துறையில் நட்பு ரீதியிலான அந்த அணுகுமுறை தொடர வேண்டும்’ என்று விஜய் சேதுபதி கூறியதாக மடோன் அஸ்வின் குறிப்பிட்டுள்ளார்.
நல்லது விஜய் சேதுபதி.
000