ஜனவரி-23.
ஒரே கிராமத்தில் ஒரு மாதத்தில் ஒருவர் பின் ஒருவராக17 பேர் இறந்துவிட்டனர். இவர்கள் அனைவரும் மூன்று குடும்பங்களைச் சேர்ந்தவர்கள்.
ஏன்? எதற்காக இப்படி சாகிறார்கள் என்பது புரியவில்லை. அந்தக் கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அரசு அறிவித்து உள்ளது.
காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தின் பாதல், இந்திய எல்லையோர கிராமங்களில் ஒன்று. அங்கு கடந்த டிசம்பர் 7- ஆம் தேதி முதல் இறப்பு நிகழ்ந்தது. அதன் பிறகு தொடர்ச்சியாக மரணங்கள். ஒவ்வொரு உடலும் மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது. உடலில் விஷம் எதுவும் கலந்திருக்க வில்லை. மாரடைப்பு போன்ற நோய்களாலும் உயிர் பிரிந்ததற்கனா அறிகுறிகள் கிடையாது. கடுமையான தொற்று எதாவது பரவி இருக்கிறதா என்று சோதித்துப் பார்த்தார்கள். அதுவும இல்லை. கடந்த ஒரு மாதத்தில் மொத்தம் 17 பேர் இறந்துவிட்டனர் இப்போதும் பாதல் கிராமத்தைச் சேர்ந்த அய்ஜால் என்ற 24 வயது இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். அவருக்கும் உடல் நிலை மோசமாக உள்ளது.
ராஜோவுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜிவ் குமார் கிராமத்தை நேரில் ஆய்வு செய்தார். அவர் அந்த கிராமத்தை தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்து உள்ளார். இதன்படி பாதல் கிராமத்தில் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது. பொது மக்கள் ஒரு இடத்தில் கூடி நின்று பேசுவதற்கும் அனுமதி இல்லை.
அடுத்தடுத்து உயிரிழப்புகள் நிகழ்ந்த குடும்பங்கள் வசித்த இடங்களில இருந்து மற்றவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டார்கள் . அந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டு அங்கு வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்ட்டு உள்ளது.
காஷ்மீர் மாநில முதலமைச்சர் உமர் அப்துல்லா அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்துக் கொண்டு பாதல் கிராமத்திற்கு சென்று ஆறுதல் கூறவிிட்டு வந்து உள்ளார்.
தொடர் இறப்புக்கு என்ன காரணமாக இருக்கும் என்பது புதிராக உள்ளது .
*