ஓ.பி.எஸ். மகன் வெற்றி செல்லாது என்று தீர்ப்பு – பன்னீரின் அரசியல் வாரிசுக்கு பின்னடைவு.

ஓ.பன்னீர்செல்வம் மகன் ஓ.பி.ரவீந்திர நாத் தேனி மக்களவைத் தொகுதியில் வெற்றிப் பெற்றது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் தேனி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு ரவீந்திர நாத் வெற்றிப் பெற்றதை எதிர்த்து இந்த வழக்கு தொடரப்பட்டு இருந்தது. அந்த தொகுதியை சேர்ந்த மிலானி என்பவர் தொடர்ந்திருந்த வழக்கில் ரவீந்திர நாத் வேட்பு மனுவில் சொத்து விவரங்களை மறைத்து உள்ளார்,வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தார். முறை கேடு செய்தார் என்ற புகார்களை கூறி இருந்தார். நீதிபதி சுந்தர், இந்த தேர்தல் வழக்கை விசாரித்து ரவீந்திர நாத் வெற்றி பெற்றது செல்லாது என்று தீர்ப்பளித்து உள்ளார். எனினும் மேல் முறையீடு செய்வதற்காக 30 நாட்கள் தீர்ப்பை நிறுத்தி வைப்பதாகவும் தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

அதிமுக கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேனியை தவிர மற்ற தொகுதிகளில் வெற்றி பெற வில்லை. ஓ.பன்னீர் செல்வம் தமது மகளை மட்டும் வெற்றிப்  பெறச் செய்துவிட்டதாக அதிமுகவினர் விமர்சனங்களை செய்துவந்தனர். அதை நிரூபிப்பது போன்று ரவீந்திர நாத் வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்து உள்ளது.

000

Click below to Share,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *