கடந்த ஒரு வருடத்தில் மக்களின் வங்கி கணக்கில் இருந்து ரூ.288.38 கோடி திருடபட்டுள்ள தகவல் பொதுவெளியில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வருடத்தில் ரூ.288.38 கோடி பொது மக்கள் வங்கி கணக்கில் இருந்து திருடப்பட்டுள்ளது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் ரூ.106 கோடி முடக்கப்பட்டு, ரூ.27 கோடி உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. கடந்த 3 மாதத்தில் மட்டும் 12 ஆயிரம் புகார்கள் பெறப்பட்டுள்ளது என்பதும், 29 பேர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், போலி சிம் கார்டு மற்றும் குற்ற செயலில் ஈடுபடுத்திய தொலைபேசி எண்கள் என 22,240 சிம் கார்டுகள் பிளாக் செய்யப்பட்டுள்ளதாகவும், தமிழக சைபர் கிரைம் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.