May 15,2023
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன், 80 வயதிலும் தனது சிறப்பான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறார். சமீபத்தில், அவர் சமூக ஊடகங்களில் ஒரு சுவாரஸ்யமான பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், நடிகர் அமிதாப் பச்சன் ஷூட்டிங்கிற்கு செல்ல ரசிகர் ஒருவரின் பைக்கில் சென்றதோடு அந்த புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அப்பதிவில், “சவாரி கொடுத்தற்கு நன்றி நண்பரே.. என்னை ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு சரியான நேரத்தில் அழைத்துச் சென்றீர்கள்.. தீர்க்க முடியாத போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உதவிய தொப்பி, ஷார்ட்ஸ் மற்றும் மஞ்சள் நிற டி-சர்ட் உரிமையாளருக்கு நன்றி.” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.